- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது. “பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று பயனுரைக்கும் முகத்தால் அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும். மின்னுமா மழைதவழும் மேகவண்ணா = மின்னி முழங்கி வில்லிட்டு அழகியதாய் வர்ஷிப்பதொரு காளமேகம் போன்ற வடிவுபடைத்த பெருமானே! இங்கே வியாக்கியான வாக்கியம் காண்மின்; - “* அடிநாயேன் நினைந்திட்டேனே என்ற இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு இவருடைய தாபமெல்லாம் நீங்கும்படியாகக் குளிரநோக்கிக்கொண்டு காளமேக நிபச்யாமமான வடிவோடே வந்து முகங்காட்டின படியைச் சொல்லுகிறது.“ விண்ணவர்தம் பெருமானே! அருளாய் என்று = கீழ்ச்சொன்ன மின்னுமா மழைதவழும் மேகவண்ண வடிவை ஓவாத ஊணாக உண்டு களிக்கப்பெற்ற அயர்வறுமமரர்களுக்கு அதிபதியே!, கடலிலே வர்ஷிப்பது போலவும் மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலவும் அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓரேற்றமோ? (அருளாய்) அவர்கள் உன்னை நித்யாநுபவம் பண்ணுமாபோலே நானும் உன்னை நித்யாநுபவம் பண்ணும்படி கிருபை பண்ண வேணும் (என்று மன்னுமானமணி மாடமங்கை வேந்தன் மானவேற் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ மாலை) மங்கை நாட்டுக்கு அரசராய், வேல் பிடித்துப் பகைவெல்லுந் தொழிலிலே. ஊன்றிக்கிடந்தவர் “அரசமர்ந்தானடி சூடுமரசையல்லால் அரவாகவெண்ணேன் மற்றரசுதானே“ என்றாற்போன்ற அத்யவஸாயத்தின் கனத்தாலே இங்ஙனே பேசினாராயிற்று எம்பெருமானும் அவனடியார்களும் உவந்து முடிமேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது. ஆக இப்படிப்பட்டதிவ்ய ப்ரபந்தத்தை ஓதவல்லவர்கள் அநாதியான ஸம்ஸாரத்தை யடியறுத்து நித்ய கைங்கரியம் பெற்று வாழப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்