விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பட்டுஉடுக்கும் அயர்த்துஇரங்கும் பாவை பேணாள்*  பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,* 
  எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்*  எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 
   
  மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*  மடமானை இதுசெய்தார் தம்மை,*  மெய்யே- 
  கட்டுவிச்சி சொல்', என்னச் சொன்னாள் 'நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?'

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பள்ளி கொள்ளான் - உறங்குகின்றிலன்;
என் துணை போது - ஒரு நொடிப்பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள் - என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான் - எம்பெருமானுடைய
திரு அரங்கம் - ஸ்ரீரங்கக்ஷத்ரம்

விளக்க உரை

பேரின்பவநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும் கொங்கை முதலிய சொற்களையிட்டுப் பாசுரங்கள் கூறுவதாகவும் நிகழ்கிறவிது என்னோ? எனின்; விஷயாந்தரகாமம் என்றும் பகவத் விஷயகாமம் என்றும் காமம் இருவகைப்படும்; வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்காரமுறைமையில் பரிணமித்து நிற்கும். சிற்றின்பவநுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதநமாயிருப்பது போல, பகவத் விஷயாநுபவத்திற்குப் பரபக்திபரஜ்ஞாந பரமபக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால் அவையே கொங்கை முதலிய சொற்களால் அருளிச் செயல்களிற் கூறப்படுகின்றன வென்றுகொள்க. ச்ருங்காரரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள் அருளிச்செய்யக் கூடுமாயினும் ஆழ்வார்கள் ச்ருங்காரரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் யாதெனில்; ஆரோக்கியத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட்கொள்ள இறாய்க்குமவர்களுக்கு வெல்லத்தை வெளியிற் பூசிக்கொடுத்துத் திண்பிப்பதுபோலச் சிற்றின்பம் கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றனரென்ப. பகவத் விஷயத்தில் அபிநிவேசம் மீதூர்ந் காலத்தில் தன்நிலைமாறிப் பெண் நிலைபெற்றுப் பேசுமிடத்தில், தாய்பாசுரமென்றும் தலைவிபாசுரமென்றும் தோழி பாசுரமென்றும் இப்படி வகுத்துக் கூறுவதற்கும் உட்கருத்து உண்டு;- தோழியாகப் பேசுவதற்குக் கருத்து: - நாயகனையும் நாயகியையும் இணக்கிச் சேர்க்குமவள் தோழியாவள். திருமந்திரத்தில் பிரணவத்தினால் எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹசேஷத்வம் முதலிய ஸம்பந்தங்களை உணருகையே அப்பெருமானோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே அந்த ஸம்பந்தஞானமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழியென்பதாகக்கொள்க.

English Translation

O First Lord! O Golden Lord, sentinel of the seven worlds! Other than exclaiming, "What happened to you? Where are you?", this despicable lowly devotee-self knows nothing. O Lord of the South, Lord of the North, Lord of East and west! O Rutted elephant! O First Lord of the celestials! You are the radiant Lord of Tirumulikkalam, where later generations will worship you forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்