விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட-  புகழ்ஆனாய்!*  இகழ்வாய தொண்டனேன் நான்,* 
  என்ஆனாய்? என்ஆனாய்? என்னல் அல்லால்*  என்அறிவன் ஏழையேன்,*  உலகம் ஏத்தும்- 
   
  தென்ஆனாய் வடஆனாய் குடபால் ஆனாய்*  குணபாலமதயானாய் இமையோர்க்கு என்றும்- 
  முன்ஆனாய்*  பின்ஆனார் வணங்கும் சோதி!*  திருமூழிக் களத்துஆனாய் முதல்ஆனாயே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இமை யோர்க்கு முன்னானாய் - நித்யஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி - அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக
திருமூழிக்களத்து ஆனாய் - திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய் - முழுமுதற் கடவுளே!
பொன் ஆனாய் - பொன் போன்றவனே!

விளக்க உரை

ளதோவிம்மண்ணின் மிசையே” “எனக்கென்னினி வேண்டுவதே” “இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க. பொழிலேழுங் காவல்பூண்ட புகழானாய் = ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கையன் றியே தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ்படைத்தவனே!. ‘காவல் பூண்ட‘ என்றதனால் காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டிருப்பனென்கிறது. ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரணம்புகுந்தபோது ஸுக்ரீவமஹாராஜர் முதலானார் இவனை ரக்ஷித்தருளலாகாதென்று தடைசெய்த விடத்தும் ஒருதலை நின்று ரக்ஷித்தே தீரும்படியான விரதம்பூண்டவனிறே எம்பெருமான். (இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாப் என்னானாப் என்னலல்லால் என்னறிவனேடையேன்?) ‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்; அடைவே, நீசனாகிய என்றும், இகழத்தக்க வாய்மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க. தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப்படுதல்போலவும் பிச்சையாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்யஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார். (என் ஆனாய்! என் ஆனாய்!) ஆனை என்பது ஈறுதிரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று; ‘என்னுடைய மத்தகஜமே! என்னுடைய மத்தகஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத் தனையொழிய ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.

English Translation

O First Lord! O Golden Lord, sentinel of the seven worlds! Other than exclaiming, "What happened to you? Where are you?", this despicable lowly devotee-self knows nothing. O Lord of the South, Lord of the North, Lord of East and west! O Rutted elephant! O First Lord of the celestials! You are the radiant Lord of Tirumulikkalam, where later generations will worship you forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்