விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி* பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற 
  ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற* இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது*
  ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ* ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற*
  மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி* முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மூவருமே என்ன நின்ற – மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம் படியமைந்த;
இமையவர் தம் – தேவதைகளினுடைய;
திரு உரு – ரூபங்களை;
வேறு எண்ணும் போது – தனித்தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்;
ஓர் உருவம் – (நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது;

விளக்க உரை

அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளிடத்தும் ஸாம்யபுத்தி நடப்பதாகிற ஒரு அநர்த்தமுண்டே, அந்த அநர்த்தத்தையும் எம்பெருமான் தமக்குப் போக்கியருளின படியைப் பேசுகிறார் இப்பாட்டில். இருவர் சேஷபூதராய் ஒருவன் சேஷியாய், இருவர் ஸ்ருஷ்டிக்கப்படுகிறவர்களாய் ஒருவன் ஸ்ருஷ்டி செய்பவனாய், இருவர் சரீரபூதராய் ஒருவன் சரீரியாய் இருக்கிறபடியை எனக்குக் காட்டித்தருளினா னென்கிறார். இந்திரன் சந்திரன் வருணன் குபேரன் என்று பலப்பல தெய்வங்கள் இருந்தாலும் விஷ்ணு, பிரமன், சிவன் என்கிற மூன்று மூர்த்திகளே முக்கியமாக வழங்கப்பெறும்; அம்மூன்று மூர்த்திகளின் உருவங்களை ஆராயுமிடத்தில், ஒருவனுடைய (நான்முக னுடைய) வடிவம் பொன்னின் வடிவாகவுள்ளது; மற்றொருவனுடைய (பரமசிவனுடைய) வடிவம் சிவந்த நெருப்பின் வடிவாகவுள்ளது; இன்னுமொருவனுடைய (ஸ்ரீமந் நாராயணனுடைய) வடிவம் கருங்கடல் போன்றுள்ளது. மேற்சொன்ன மும்மூர்த்திகளையும் பிரமாணங்கொண்டு பரிசீலனை செய்யுமிடத்து, பஞ்சபூதங்களை யுண்டாக்கியும் பலவகைப்பட்ட சமயங்களையுயை ஜகத்தை ஸ்ருஷ்டித்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்தும் நிற்கிற பரஞ்சோதியான எம்பெருமானுடைய வுருவம் காளமேகவுருவமாயிருக்கும் என்று சொல்லுகிறவிதனால் முகிலுருவமுடையவனே எம்பெருமான் என்றாராயிற்று. “ஏருருவில் மூவருமே யென்னநின்ற இமையவர்தம் திருவுரு வேறெண்ணும்போது ஒருருவம் பொன்னுருவம், ஒன்று செந்தீ, ஒன்று மாகடலுருவம், ஒத்து நின்ற மூவுருவுங் கண்டபொது பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்துநின்ற ஒன்றாஞ்சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே“ என்று அந்வயிப்பது. பருருவி – ‘உர்வீ‘ என்னும் வடசொல் உருவியெனத் திரிந்தது, பூமியென்று பொருள். பார் என்றது பூமிக்கு விசேஷணமாய் நிற்கிறது இங்கு. பருமைபொருந்திய பூமியென்றபடி. அண்ட காரணமான பஞ்சபூதங்களை ஸ்ருஷ்டி யெனப்படும், அஃது உள்ள ஸ்ருஷ்டி யெனப்படும். “பாருருவி நீரெரிகா்ல் விசும்புமாகி“ என்றது ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் சொன்னபடி, “பல்வேறுசமயமுமாய்“ என்று வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது. தேவமநுஷ்யாதி பேதத்தாலே பலவகைப்பட்ட பாகுபாடுகளையுடைய ஜகத்தை யுண்டாக்கினவனாய் என்றபடி. சமயம் என்றது வடசொல் திரிவு ஏற்பாடு என்று பொருள். உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஏற்பாடு உண்டு, தேவதைகள் – ஆராதிக்கவுரியராயும் அமுதமுண்பவராயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு, மனிதர் ஆராதனை செய்பவர்களாயும் அன்னமுண்பவர்களாயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு, திர்யக்குக்களும் ஸ்தாவரங்ளும் ஆராதனைக்குக் கருவியாயிருத்தல் அவற்றுக்கான ஏற்பாடு, இங்ஙனே கண்டுகொள்க. பரந்துநின்ற – பரக்கையாவது – ஷ்ருஷ்டிக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களிலும் அநுப்ரவேசத்தாலே ஆத்மாவாராய் வியாபித்து நிற்கையாம். ஸூக்ஷ்மசேதநா சேதநவிசிஷ்டனாகிற படியைச் சொன்னவாறு. இதற்கு ஈற்றடியில் அந்வயம். (ஏருருவில்) ஜகத்திலே என்றபடி. ஜகத்துமுழுவதும் எம்பெருமானுடைய உரு (சரீரம்) ஆகையாலே அந்தச் சொல்லியிட்டுச் சொல்லிற்று. * இருள்தருமாஞாலம் என்று வெறுக்கத்தக்க இதனை ஏருரு என்பானென்? என்னில், இந்த –கத்தானது முமுக்ஷுக்களுக்கு ஒருபடியாலே ஹேயமாயும் ஒருபடியாலே உத்தேச்யமாயுமிருக்கும், ஸம்ஸாரஸ்தானம் என்று வெறுக்கத்தக்கதாயிருக்கும், எம்பெருமானுடைய விபூதியென்கிற காரணத்தாலே உத்தேச்யமாயிருக்கும். இங்கு உத்தேச்பத்வம் தோன்ற ஏருரு என்றதாகக் கொள்க. மூவருமேயென்னநின்ற இமையவர் – ஸ்ருஷ்டி, ரக்ஷணம், ஸம்ஹாரம் என்பன மூன்று தொழில்கள். இவைமூன்றையும் ஸ்ரீமந் நாராயணனொருவனே நிர்வஹித்தாலும் அவன்தான் விரமனை அநுப்ரவேசித்து ஸ்ருஷ்டிமையும், ருத்ரனை அநுப்ரவேசித்து ஸம்ஹாரத்தையும், தானான தன்மையிலே ரக்ஷணத்தையும் நடத்திப் போருகையாலே மூன்றுக்கும் ஒருவனே கடவன் என்று தெளியகில்லாத ஸாமாந்யஞானிகள் ஒவ்வொருதொழிலுக்கு ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வதந்த்ர நிர்வாஹகமாகக் கொண்டு மூன்று மூர்த்திகள் ஆச்ரயணீ என்று. “ஸஆத்மா, அங்காந்யந்யா தேவதா“ என்று சுருதியின்படி ப்ரஹ்மருத்ர்ர்களும் எம்பெருமானுடைய திருமேனியேயென்று தெளியக்கண்டவராகையாலே அவர்களையும் திருவுரு என்ற கௌரவச் சொல்லுகிறார் என்ப. வேறெண்ணும்போது – “நன்றெழில் நாரணன் நான்முகனரனென்னுமிவரை, ஒன்றநும்மனத்துவைத்து உள்ளிநும்மிருபசை யறுத்து, நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நானே“ என்ற திருவாய்மொழிப்படியே ஏக த்த்துவமாக மனத்து வைக்கிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும், அங்ஙன்ன்றியே பிரித்து ப்ரதிபத்தி பண்ணுகிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும், அங்ஙன்ன்றியே பிரித்து ப்ரதிபத்த பண்ணுகிற பட்சத்தில் ப்ரமஙேதுவான அஸாதாரண டிவங்களைச் சொல்லுகிறது ஒருருவம் பொன்னுருவ மென்று தொடங்கி. பிரமனது உருவம் பொன்னுருவாயிருக்கும், பொன்னானது எல்லா ஆபரங்களும் பண்ணுகைக்கு உரித்தாயிருப்பதுபோல பதினான்கு லோகங்களையும் ஸ்ருஷ்டிப்பதற்கு உரியவுருவமென்று தோற்றியிருக்குமென்க. (ஒன்று செந்தீ) ருத்ரனது உருவம் செந்தீயுருவாயிருக்கும், அக்நிக்கு ஸ்வபாவம் அனைத்தையும் கொளுத்து கையாகையாலே, ருத்ரனுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தால் ஜகத்தையெல்லாம் உபஸம்ஹரிப்பதற்கு உரித்தாயிருக்குமென்று தோற்றவிருக்கும் (ஒன்றுமாகடலுருவம்) கண்டார்க்கு முதலியவற்றொடு வாசியற ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யிட்டுவைத்து ரக்ஷிக்கையும் பார்த்தால், ஆச்ரிதர்களுக்குத் தாபத்ரயஹரமாயும், ஆச்ரயித்தாரைத் தன்னபிமானத்திலே யிட்டுவைத்து ரக்ஷிக்கும்மதாயுமிருக்கை தோற்றவிருக்கும். ஒத்துநின்ற மூவுருவுங்கண்டபோது மூவுருவம் ஒத்திருக்கையாவதென்? என்னில் அவரவர்களுடைய தொழிலுக்கு அவரவருடைய உருவம் பொருத்தமா யிருக்கும்படியைச் சொன்னவாறு. ஸ்ருஷ்டிக்குப் பொருத்தமாயிருக்கும் பொன்னுருவம், ஸம்ஹாரத்துக்குச் சேர்ந்திருக்கும் செந்தீயுருவம், ரக்ஷணத்திற்குத் தகுந்திருக்கும் மாகடலுருவம் என்று காண்க. ஆக இப்படிப்பட்ட மூவுருவையும் பிரமாணகதி கொண்டு ஆராயுமிடத்தில், பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும். *ஏகோஹவை நாராயண ஆஸீத்* என்றிவை முதலான வேதப்ரமாணங்களின்படியே ஸ்ரீமந் நாராயணானொருவனே முழுமுதற் கடவுளாயிருப்ப னென்றாராயிற்று. எம்மடிகளுருவம் முகிலுருவம் = கீழ், ‘மாகடலுருவம்‘ என்றதையே இங்கு முகிலுருவமென்று அநுபாஷிக்கிறார். முகிலுருவ முடையவரே எம்மடிகள் என்றாரென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்