விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
    துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*
    மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
    பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின் அருள் அல்லது – உனது கருணையையே யன்றி மற்றொன்றை
எனக்கு துணியேன் – எனக்கு (த்தஞ்சமாக) நினைத்திடேன்
மணியே – நீலமணி போன்றவடிவை யுடையவனெ!
மணி மாணிக்கமே – சிறந்த ரத்நமான மாணிக்கம் போல மேன்மை யுடையவனே!
மதுசூதா – மதுவென்னும் அசுரனை யழிந்தவனெ!

விளக்க உரை

அரங்கநகரப்பனே! ஆபத்காலத்திலுதவும் உற்ற வுறவினனான நீ மிக்க குளிர்ச்சியுடையதாய் இளைப்புத் தீர்க்கவல்லதான திவ்ய தேசத்திலே அடியார்களை உஜ்ஜீவிப்பிக்கும் பொருட்டு வந்து எழுந்தருளியிருத்தலால் உனது அருளையன்றி வேறொன்றை எனக்குப் பற்றுக்கோடாகக் கொள்ளேன் யான் என்கிறார். துணிதல்-ரக்ஷகமாக நிச்சயித்தல். அணி ஆர்பொழில்-வரிசையாகப் பொருந்திய சோலை யெனினுமாம். சேதநர்கட்கு ஹிதங்களைச் செய்வதில் தந்தைபோலுதலால் எம்பெருமான் அப்பன் எனப்பட்டான். மணியே! கண்டவர் கண்குளிரும்படி நீலமணிபோன்று காண்பவரிளைப்பைத் தீர்க்கும் படியான வடிவுடையவனே! என்றபடி. மணிமாணிக்கமே! மிக்க விலையுள்ளதும் பெறுதற்கரியதுமான மாணிக்கமென்னுஞ் சிறந்த ரத்நம்போல இயற்கையில் மேன்மையுடையவனே யென்றவாறு. இவ்விரண்டும் உவமையாகுபெயர். ‘மணியே மணிமாணிக்கமே’ என்றழைத்தது வடிவழகிலும் மேன்மையிலுங்கொண்ட ஈடுபாட்டினால். ‘மதுசூதா’ என்றழைத்தது, நீ முன்பு மதுவென்னும் அசுரனைக் களைந்தாற்போல இப்பொழுது எனக்குப் பகையான பிறவித் துயரத்தை அழித்தருள்வாயென்ற குறிப்பு. செய்வது இன்னதென்று அறியாது சோதித்து நின்ற அர்ஜுநனைக்குறித்து ‘உனது பாரமுழுதையும் நம்மேல் ஏறிட்டு நம்மையே தஞ்சமாக நினைத்திரு’ நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் நீ சோகியாதே; என்று கீதையருளிச் செய்தாற்போலே, நான் உய்யும்படி எனக்கு ஒரு நல்வார்த்தை யருளிச் செய்யவேணு மென்பார் ‘எனக்கு உய்யும் வகை பணியாய்’ என்கிறார். நீ பேறு தந்தருள்வது பின்பொரு மையத்திலானாலும், முன்னர் ‘தருவேன்’ என்று சொல்லுதல் மாத்திரஞ் செய்தாலும் அதுகொண்டு ஆறியிருப்பே னென்பது உட்கோள். இங்ஙனம் தாம் பிரார்த்தித்தற்கு இரங்கி அவன் ஒன்று சொல்லத் தொடங்கும்போது அவனது திருமுகமண்டலத்திலும் திருமேனியிலும் அருளினா லுண்டாவதொரு பெருவிளக்கத்தை யுட்கொண்டு பரஞ்சோதி யென விளித்தனரென்பர் பெரியவாச்சான்பிள்ளை.

English Translation

O Lord of flower-groves-surrounded Aranganagar! Now I seek nothing other than your grace. O Precious Gem! O Gem Lord! O Madhusudanai O Light effulgent! Pray show me a way.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்