விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படைநின்ற*  பைந்தாமரையோடு*  அணிநீலம்- 
    மடைநின்று அலரும்*  வயல்ஆலி மணாளா,*
    இடையன் எறிந்த மரமே*  ஒத்துஇராமே,* 
    அடைய அருளாய்*  எனக்கு உன்தன் அருளே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடை நின்று – (பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து
அலரும் – மலரப்பெற்ற
வயல் – கழனிகளை யுடைய
ஆவி – திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற
மணாளா – மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ!

விளக்க உரை

மணாளன்-மணவாள னென்பதன் மரூஉ; கலியாணப்பிள்ளையென்று பொருள்படும். முணம் ஆளன் எனப்பிரியும். திருவாலியி லெம்பெருமான் அமிருதகடவல்லி நாச்சியாரை மணம்புரிந்த மணவாளத் திருக்கோலத்ததுடனே வந்து இவ்வாழ்வார்க்குக் காட்சிதந்து வலிய ஆட்கொண்டு மந்திரோபதேசஞ் செய்து அருள்புரிந்ததனாலும் மணவாளளெனத் திருநாமுமுடையன். இவ்வாழ்வார்தம்மைத் தலைமகளாகப் பாவித்து இப்பெருமானைத் தமக்கு மணவாளனாகக் கொண்டு சில திருமொழிகள் விண்ணப்பஞ் செய்திருந்தலும் உணர்க. பின்னடிகளின் கருத்தாவது-ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாப்படி இடையர்கள் சில மரங்களின் கிளைகளைக் கைக்கத்திகொண்டு பாதியளவு வெட்டிச்சாயவிட்டிருத்தல் இயல்பு. அம்மரம் ஒருசார்பசுமையாய் ஒருசார்உலர்ந்து கிடக்கும், அதுபோல நான் ஞானலாபத்தாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றதனோடு பேறுகிடைக்கப் பெறாமையாலுண்டான வாட்டத்தையும் அடைந்திராதபடி எனக்கு அருள்செய்யவேண்டுமென்கிறார். “நீடுபன் மலர்மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்து மென் மனம்வாட நீ நினையேல்....................................... அணியாலியம்மானே!” என்றார் முன்னும். முழுவதும் ஆநந்தமே பெறும்படி அருள வேண்டுமென்றவாறு. வேர்ப்பறிந்த கொடியின் மலர்களும் போட்டவிடத்திலே செவ்வி பெறும்படி செய்யுந் தேசத்திலே வாழ்பவனாய் முதல் பறிந்ததற்குஞ் செவ்வி பெறுத்தவல்ல பரமசக்தியுக்தனான உனக்கு வேர்ப்பறியாது ஒருசாருலர்ந்தது மாத்திரமாயுள்ள மரத்துக்கு முழுவதும் பசுமையுண்டாம்படி செய்தல் எளிதே; ஆகவே, அம்மரம் போல ஒருபுறம் தளிர்த்து ஒருபுறம்வாடும் எனக்கு நீ பூர்ணாநத்தத்தை விளைக்கத்தட்டில்லையென இப்பரசரத்தின் நயமுணர்க. பல பொல்லாங்குகட்கு இடமான உடம்புடனே இவ்வுலகத்திலே யிருந்து தொண்டுசெய்தலினால் பூர்ணத்ருப்தியுண்டாகாமைபற்றி நான் பரமபதத்தில் உன்னையடையும்படி அருள்புரிய வேணுமென்ற வேண்டினாராயிற்று. ‘இடையனெறிந்த மரம்’ என்றதொடா; ஒரு பழமொழியாய் வழங்கிவந்த தென்பது “அடையப்பயின்றார்” என்று தொடங்கும் பழமொழிச் செய்யுளின் ஈற்றடியாக அத்தொடர் அமைந்திருத்தலால் வந்த ‘ஆற்றங்கரை மரம்’ ‘காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்’ ‘வெள்ளத்திடைப்பட்ட நரியினம்’ ‘வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது’ என்பனவும் முதமொழியாதலைப் பழைய நூல்களிற் காணலாமென்ப.

English Translation

O Bridegroom Lord of fertile Tiruvali surrounded by wetlands where red lotuses and blue lilies blossom in profusion! That I may not be like a free chopped for the grazing animals, I seek your grace alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்