விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள்ளக் குறையாத*  இடும்பைக் குழியில்,* 
    தள்ளிப் புகப்பெய்தி கொல்*  என்றுஅதற்கு அஞ்சி,*
    வெள்ளத்து இடைப்பட்ட*  நரிஇனம் போலே,*
    உள்ளம் துளங்கா நிற்பன்*  ஊழி முதல்வா!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அதற்கு அஞ்சி – அப்பிறவித்துயர்க்கு அஞ்சி
வெள்ளத்து இடை – வெள்ளத்திலே
பட்ட – அகப்பட்டுவருந்துகிற
நரி இனம் போலே – நரிக்கூட்டம்போலே
உள்ளம் துளங்கா நிற்பன் – மனம் நடுங்கிநிற்பேன்யான்

விளக்க உரை

இன்னமும் என்னைக் கொடிய ஸம்ஸாரத்திலே தள்ளி அகற்றிவிடப் பார்க்கிறாயோவென்று பெருநீர்ப் பெருக்கிலகப்பட்ட நரியினம் போலே ஒன்றுங் தோன்றாது நிலைதளும்பிக் கிடக்கின்றே னென்கிறார். இவ்வளவு காலம் அநுபவித்துக் கழிவதென ஓர் எல்லையுண்டாகில் அக்கால வரையறையை எதிர்பார்த்து அது கழியுமளவும் கிலேசப்பட்டாலும் படலாம்; அங்ஙனமன்றி, காலதத்துவமுள்ளவளவும் அநுபவித்துக்கொண்டிருந்தாலும் முதலிற் குறைவுபடாது மேன் மேல் வளர்கிற துன்பங்களைத் தருவதான பிறப்பு, என்பது முதலடியின் கருத்து. பிறப்பில் புகுதற்குக் காரணம் ஊழ்வினையேயாயினும் அதனை எம்பெருமான் ஒழித்திடுவதற்கு ஸமர்த்தனாயிருந்தும் அங்ஙனம் ஒழித்திடாதிருத்தலே காரணமாக ‘தள்ளிப்புகப் பெய்தி கொல்’ என்று அவன்மேல் கூறுகின்றார். “கிணற்றிலேவிழுகிற ப்ரஜையை வாங்காத தாயைத் தானேதள்ளினான் என்னக் கடவதிறே” என்ற வியாக்கியான வாக்கியம் அறியத்தக்கது. தள்ளிப்புகப்பெய்திகொல்?= ‘நெருப்பிலே அகப்பட்டு எரிகிறவனைத்திரிய அதுக்குள்ளே தள்ளி ஒன்றையிட்டு அமுக்குவரரைப்போலே.’ நரியினம்போலே=வெள்ளத்திலகப்பட்ட ஒருநரியின் வருத்தம் தமது கிலேசத்திற்குப் ஒப்பாதற்குப் போதாதென்னுங்கருத்தால் ‘நரியினம் போலே உள்ளந்துளங்கர நிற்பன்’ என்கிறார். நரிகள் பலவற்றுக்கு முண்டானபயம் இவரொருவர்க்குமே உண்டாயிற்றென்க. ஊழிமுதல்வா!=முன்பு நீ பரிஹாரித்த ப்ரளயாபத்தினளவல்ல நான் நோவுபடுகிற ஸம்ஸராப்ரளயம், அங்கு ஒருவரும் அபேக்ஷியாதிருக்கப் பரிஹாரித்தாய்; இங்கு நான் அபேக்ஷக்கச் செய்தேயும் பராமுகமாயிருக்கிறாய் என்பது குறிப்பு.

English Translation

O First-Lord! You may intend to make me wander through many more births, -a dreadful thought. Like a white-ant caught in a fire wood burning on both ends, my heart shudders and melts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்