விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    திரிவாய்என்று சிந்தித்தி*  என்றுஅதற்கு அஞ்சி,*
    இருபாடு எரிகொள்ளியின்*  உள் எறும்பே போல்,* 
    உருகாநிற்கும்*  என்உள்ளம் ஊழி முதல்வா!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊழி முதல்வா – பிரளயகாலத்து (உலக முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கிற) தலைவனே!
உரு ஆர் பிறவிக்கள் – வடிவமைந்த பிறப்புக்களிலே
இன்னம் புக பெய்து – இன்னமும் (என்னைப்) பிரவேசிப்பது
திரிவாய் என்று சிந்தித்தி என்று – (கருமவசத்தால்) திரியக் கடவாய் என்று (என்னைக்குறித்து நீ) திருவுள்ளங்கொள்ளுகின்றனையோ? எனறு
அற்கு அஞ்சி – அப்பிறவிகளில் திரிதற்கு அஞ்சி.

விளக்க உரை

பிரளயாபத்திலே அனைத்தையும் பாதுகாக்கிற இறைவனே இந்த ஆபத்துக்கும் உதவத் தக்கவனென்று கொண்டு ஊழிமுதல்வா! என விளித்துக் கூறுகின்றார். பிரமன் முதலிய ஸகல தேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற கல்பரந்த காலத்திலே ஸ்ரீமங்நாராயணன் அண்டங்களையெல்லாம் தன் திருவயிற்றில் வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப் பெருங்கடலிலே ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிக்கொண்டு அறிதுயில் செய்தருள்கின்றனனென்ற வரலாறு இங்கு அறியத்தக்கது. ஊழிமுதல்வா! இன்னமும் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து திரிவேனாம்படி திருவுள்ளம்பற்றியிருக்கின்றாயோ என்று நினைத்து அஞ்சி, இரண்டு பக்கத்திலும் நெருப்புப் பற்றி யொரிகின்ற கொள்ளிக்கட்டையின் நடுவிலே அகப்பட்டு வருந்தும் எறும்புபோல என்மனம் கிலேசப்பட்டுக்கொண்டே யிருக்கின்ற தென்கிறார்!. உரு ஆர்பிறவி = உடம்பும் உயிருங்கூடியதாயினும் உடம்பின் குணமான பேதைமையேமிக்கு குணமான உணர்வுகுன்றித் தேஹாபிமானமே மிகுந்து ஆக்மோஜ்ஜிவா வகையிற்புகாத பிறப்பு என்றபடி. பலவகைப்பட்ட வடிவங்கொண்ட பிறப்பு என்னவுமாம். அச்சத்துக்கு காரணமா யமைந்த பிறப்பு என்றும் பொருள் கொள்ளலாம். திரிதல்-மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து இறந்து உழலுதல். இருபாடொரி கொள்ளியினுள் ளெறும்பேபோல்=எந்தப்பக்கம் போனாலும் தீமையையே அடையும்படி ஜநநமரணங்களிரண்டுக்கும் நடுவே அகப்பட்டுநோவுபடுகிற தன்மைக்கு எங்கும் புகலிடமுமின்றிப் பொறுக்கவும் மாட்டாதுபடுகிற பாட்டுக்கும் ஏற்ற உவமை. தமது எளிமைதோன்ற எறும்பை உவமைகூறினார். திருநாவுக்கரசு நாயனார்தேவாரத்திலுள்ள “இருதலை மின்னுகின்ற, கொள்ளிமேலெறும் பெனுள்ளம்” என்ற செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது.

English Translation

My Lotus-eyed Lord! I dread the thought that you may cast me into further dismal births and never help me out. Like sleeping in a hut with at snake in it, my heart flutters unbearably.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்