விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூங்குஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    வாங்காய்என்று சிந்தித்து*  நான்அதற்கு அஞ்சி,*
    பாம்போடு ஒருகூரையிலே*  பயின்றால்போல்,*
    தாங்காது உள்ளம் தள்ளும்*  என் தமரைக்கண்ணா!       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் தாமரை கண்ணா – செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எனது தலைவனே!
தூங்கு ஆர் பிறவிக்கள் – சஞ்சலம் மிக்க பிறப்புக்களிலே
இன்னம் புகபெய்து – (இதுவரைபட்டது போதாமல்) இன்னமும் புகும்படி போட்டு
வாங்காய் என்று சிந்தித்து – என்னை மீட்காதிருந்திடுவையோ? என்று கவலை கொண்டு
நான் அதற்கு அஞ்சி – நான் அப்பிறவித்துன்பத்திற்கு அச்சமுறுதலால்

விளக்க உரை

இரண்டு பரசுரங்களில் ஆழ்வார் தமது குற்றங்களையும் அங்கீகாரித்து எம்பெருமான் மேற் குறையுங்கூறி அவனது ஸம்பந்தத்தை விடாது பெறும் விருப்பால் வேண்டியதற்கு இரங்கி அப்பெருமான் கண்குளிரக் கடாக்ஷித்தருளி ‘ஆழ்வீர்!’ குற்றங்களை உண்டென்றுசொல்லி நம்மையும் நீர்வெறுப்பதேன்? நாம் செய்கிறபடி செய்கிறோமென்று பாரத்தை நம்மேலே இட்டு நீர்ஆறி இருக்கலாகதோ? என்று திருவுள்ளம் பற்றினதாகக் கொண்டு ‘தாமரைக்கண்ணா! ஏன் உள்ளம் நிலைநிலலாது யான் என்செய்கேன்?’ என்கிறார். இன்னமும் பலபல யோனிகளிலே என்னைப் புகும்படிசெய்து மீட்காதிருந்திடுவையோ வென்று கவலைகொண்டு அப்பிறவித் துன்பங்களை நினைத்து அஞ்சுகின்றேனாதலால், பொல்லாத பாம்புடனே ஒரு வீட்டில் பழகி வசிப்பதுபோலப் பல பொல்லாங்குகட்கு இடமான உடலோடு கூடி வாழ்வதைப் பொறாமல் என்மனம் தடுமாறுகின்றதென்கிறார். ‘உள்ளந் தள்ளுமென் தாமரைக்கண்ணா!’ என்கையாலே என்னுள்ளம் தடுமாறாதபடி கடாக்ஷித்தருள வேணுமென்பது தோன்றும். தூங்கு-முதனிலைத் தொழிற்பெயர் தூங்குதல்-அசைதல்; சலித்தல். மனம் சஞ்சலப்படுதற்கு ஹேதுவான ஸம்ஸாரமென்றபடி. இனி, தூங்குதலாவது உறங்குதலெனக் கொண்டு, தமோகுணவசத்தால் அஜ்ஞானம் மிக்க பிறப்புக்கள் எனினுமாம். ‘பிறவிக்கண்’ என்பது பழமையான பாடம்; கண்-எழனுருபு. அடுத்த பரசுரத்திற்கும் இது கொள்க. அஞ்சி-அஞ்ச எச்சத்திரிபு; இங்ஙனங் கொள்ளாதபோது மேலே அந்வபியாது. கூரை-வீட்டின்மேல் வேயப்படுவது; இது சிலையாகுபெயராய், சிறு வீட்டைக் குறித்தது.

English Translation

O First Lord! You may shove me into the womb of inexhaustible Karma, I dread the thought, Like a pack of foxed caught in a flash-flood, my heart is disturbed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்