விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
    தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*
    ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
    மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று – முன்பொருகாலத்தில்
தட – விசாலமாய்
மலர் – குவளைமலர்போன்ற
கண்ணிக்காய் – கண்களையுடையளான நப்பின்னைப்பிராட்டிக்காக
ஆன் விடை ஏழ் – ஏழுரிஷபங்களை

விளக்க உரை

எம்பெருமானுக்கு ஆட்படாதவர்கள் மநுஷ்யயோநியிற் பிறந்துவைத்தும் உணர்வின் பயன் பெறாதவர்களாகையாலே மானிடவரல்லர் என்று நான் ஸித்தாந்தம் செய்து கொண்டேன் என்கிறார். உணவுகளையுண்டு வயிறு நிரப்புகை, விஷயபோகங்கள் செய்கை, உறங்குகை முதலிய காரியங்கள் பசுக்களுக்கும் மானிடர்க்கும் பொதுவாகையாலே, இனி மானிடரென்கிற ஏற்றம் பெறவேண்டில் எம்பெருமானுக்கு ஆட்படுகையொன்றினால் தான் ஏற்றம் பெறவேண்டும் அஃதில்லாதர் மானிடவரல்லர் என்னத்தட்டில்லை. “என்மனத்தே வைத்தேனே” என்கையாலே, இது எவ்விதத்தாலும் மாறமாட்டாத ஸித்தாந்தம் என்றதாம். கீதாசார்யன் மே மதம் என்றது போல.

English Translation

The Lord resides in nectar-drunk bee-humming Tirumalirumsolai. For the sake of the dark-and-flower-like-wide-eyed dame Nappinnai, he subduled seven prize bulls. Those who do not become his devotees are no men, I hold in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்