விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கனைஆர் கடலும்*  கருவிளையும் காயாவும்* 
    அனையானை,*  அன்பினால் ஆர்வத்தால்,*  என்றும்-
    சுனைஆர் மலர்இட்டு*  தொண்டராய் நின்று,* 
    நினையாதார் நெஞ்சுஎன்றும்*  நெஞ்சுஅல்ல கண்டாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கனை ஆர் கடலும் – ஒலிமிக்க கடலையும்
கருவிளையும் – கருவிளைப்பூபையும்
காயாவும் – காயாம்பூவையும்
அனையானை – ஒத்திருக்கின்ற எம்பெருமானை
அன்பினால் ஆர்வத்தால் – அன்போடும் ஆற்றாமையொடும்

விளக்க உரை

கடல், கருவிளைப்பூ, காயாம்பூ என்னமிவற்றை ஒருபுடை ஒப்பாகச் சொல்லலாம்படியான திருமேனி படைத்த எம்பெருமான் பக்கலில் ப்ரேமவிசேஷத்தோடே, சுனைகளில் ஏற்கெனவே நிறைந்துள்ள புஷ்பங்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து அடிமைத் தொழிலுக்கு இசைந்து அவனையே சிந்தித்திருக்க மாட்டாத நெஞ்சு நெஞ்சேயன்று, நஞ்சுதான் அது என்ற தாயிற்று. அன்பினால் ஆர்வத்தால் - அன்பாவது ஸ்நேஹம்; ஆர்வமாவது, பெறாவிடில் முடிந்து போம்படியான ஆற்றாமை. சுனை ஆர்மலர்-இவன் புதிதாகப் புஷ்பங்களை ஸ்ருஷ்டிக்கவேண்டிய அருமையில்லை ஏற்கெனவே சுனைகளில் பூக்கள் நிரம்பியுள்ளன் இசைவுதானே வேண்டுவது என்று காட்டுகிறபடி. “தரமுளரே தம்முள்ள முள்ளுளதே தாமரையின் பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே” என்ற பூதத்தாழ்வார்பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

English Translation

The Lord has the hue of the roaring sea, the Karuvilai flower and the kaya flower, Those who do not cull fresh flowers from the lotus tanks and offer worship with love and enthusiasm, or even think of it, have no feeling, we know it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்