விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ஆர் துழாயும்*  கணவலரும் கூவிளையும்,* 
    முள்ஆர் முளரியும்*  ஆம்பலும்முன் கண்டக்கால்,*
    புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்*  புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
    உள்ளாதார் உள்ளத்தை*  உள்ளமாக் கொள்ளோமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள் ஆர் – தேன்பொருந்திய
துழாயும் – திருத்துழாயையும்
கணவலரும் – அலரியும்
கூவிளையும் – பில்வபத்திரத்தையும்
முள் ஆர் – முட்கள் நிரம்பிய

விளக்க உரை

திருத்துழாய் முதலிய எந்த வஸ்துவைக் கண்டாலும் ‘இது எம்பெருமானக்குச் சாத்தத்தக்கது’ என்று அத்யவஸாயங் கொள்ளாதாருடைய நெஞ்சை நெஞ்சாகக் கொள்ளமாட்டோம், நஞ்சாகவே கொள்வோமென்றவாறு. இப்பாட்டில் வியாக்கியானத்திலே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்வது காண்மின்:- “ஸ்நேஹமில்லாதவன் இடில் திருத்துழாயுமாகாது? ஸ்நேஹத்தோடே இடில் அலாரியும் ஆகும்”. முற்காலத்தில் ஸ்ரீ ஜகந்நாதத்திலெம்பெருமான் செண்பகப்பூவை உகந்து சாத்திக்கொள்வது வழக்கமாயிருந்ததனால் சில ராஜகுமாராக்ள் எம்பெருமானுக்குச் செண்பகப்பூ ஸம்பாதித்து ஸமர்ப்பிக்கவேணுமென்று கடைவீதி யேறச் சென்றனா; அங்குப் பூவெல்லாம் விற்றுப்போய் ஒரே ஒரு பூ மாத்திரம் மிகுந்திருந்தது. விலைக்கு வாங்கவந்த ராஜகுமாரர்கள் செல்வச் செருக்குடையவர்களாதலால் ஒவ்வொருவரும் இப்பூவை நாமே பெற்றுப் போய் ஸமர்ப்பிக்கவேணுமென்ற ஆவல்கொண்டவராகி மேன்மேலும் விலையை ஏற்றிக்கொண்டே வந்தார்கள். கடைசியாக அளவற்ற விலைக்கொடுத்து ஒரு ராஜபுத்திரன் அதை வாங்கிப் பெருமாளுக்குச் சாத்த, அன்றிரவு அவனுடைய கனவிலே எம்பெருமான் காட்சிதந்து நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்கவொண்ணாததா யிருக்கிறது”. என்றருளிச் செய்தான்-என்ற இதிஹாஸமும் வியாக்கியானத்திலுள்ளது. இதனால், ஸ்நேஹ பூர்வமாகப் பூவிட்டால் அது எம்பெருமானுக்கு அலப்யலாபமாயிருக்குமென்றதாயிற்று. புள்ளாய் ஓரேனமாய்ப்புக்கிடந்தான்=ஏதேனும் பக்ஷியாகவும் மிருகமாகவும் தன்னை அமைத்துகொண்ட எம்பெருமானுக்கு ஆகாதது எதுவுமில்லையென்று காட்டுகிறபடி பக்ஷிகளுக்கும் மிருகங்களுக்கும் ஆகாதது இல்லையிறே. ஆவன் ஜந்மத்தில் நியமங் கொள்ளாதாப்போலே உகந்து கொள்ளுகிற பதர்த்தங்களிலும் நியமங்கொள்ளா னென்கை. “பொன்னடிக்கென்று உள்ளாதாருள்ளத்தை” என்றதனால், கீழ்ச்சொன்ன புஷ்பங்களைப் பறித்துக்கொண்டுபோய் ஸமர்ப்பிக்கவேணுமென்கிற நிர்ப்ந்தமுமில்லை, ‘இவை எம்பெருமானுக்கு ஆம்’ என்று நெஞ்சால் நினைக்குமளவும் போதும் என்பது பெறப்படும். நினைவே அமையும்; செயல் மிகை” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

English Translation

The Lord came as a swan, and as a boar that lifted the Earth. Whenever one sees fresh Tulasi leaves, Bliva leaves. Alari flowers, roses and lotuses, if the heart does not feel, "Ah, these are for the golden feet of the Lord", that is no heart, we say it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்