விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீள்வான் குறள்உருஆய்*  நின்றுஇரந்து மாவலிமண்,* 
    தாளால் அளவிட்ட*  தக்கணைக்கு மிக்கானை,*
    தோளாத மாமணியை*  தொண்டர்க்கு இனியானை,*
    கேளாச் செவிகள்*  செவிஅல்ல கேட்டாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாவலி – மஹாபலியினிடத்தில்
மண் – (மூவடி) மண்ணை
இரந்து – யாசித்து
தாளால் – திருவடிகளாலே
அளவு இடம் – அளந்து கொண்டவனும்

விளக்க உரை

எம்பெருமானுடைய திருப்புகழ்களைக் கேட்பதே செவிபடைத்ததற்குப் பயனாதலால் அப்படி கேட்கப் பெறாத செவிகள் செவியல்ல; நிலத்திலுள்ள பாழிகளோடு அவற்றோடு ஒரு வாசியில்லை யென்றவாறு. நீள்வான் குறளுருவாய்-புலி சிங்கம் முதலியவை உடலைச் சுருக்கிக்கொண்டு பதுங்கி நிற்பது எப்படி பாய்வதற்காகவோ அப்படியே எம்பெருமானும நீளுகைக்காகவே குறளுருவாயின னென்க. தக்கணைக்கு மிக்கான்-;உக்ஷிணர் என்னும் வடசொல் தக்கணையெனத்திரிந்தது தக்ஷிணைக்கு மிகச் சிறந்தவனென்றது பரமபூஜ்யனென்பதைச் சொன்னபடி. தருமபுத்திரருடைய ராஜஸூயயாகத்திலே இது தெளிவாம். தோளாத மாமணியை-ரத்னத்திற்குத் துளைவிட்டால் நூல் நுழைத்து அநுபவிக்கப்படுவதாகும்; அப்படி அநுபவிக்கப்பட்டு ஒளி குன்றப்பெறும் ரத்னம்போலன்றியே பெட்டியிலிட்டுக் காணவேண்டும்படியான ரத்னம்போலே ஒளிமல்கப் பெற்றிருக்குந் தன்மையைச் சொன்னபடி

English Translation

The Manikin who sought Mabali, grew fall and measured the Earth with his feet, could not be granted his gift. He is my uncut gem, always sweet to devotees. Those who do not hear of him have no ears at all, so we have heard.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்