விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்*  உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,* 
    புறம்கிளர்ந்த காலத்து*  பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*
    அறம்கிளந்த திருவயிற்றின்*  அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    நிறம்கிளர்ந்த கருஞ்சோதி*  நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறம் கிளர்ந்த – கொடுமைபொருந்திய
கருங்கடல் நீர் – கருங்கடலின் வெள்ளமானது
உரம் – வேகத்தோடு
துரந்து – ஓடி
பரந்து – சுற்றும்பரம்பி

விளக்க உரை

பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கருங்கடல்தானே கொடுமை பொருந்தியதாகிக் கனவேகமாகப் பாய்ந்தோடிச் சுற்றும் பரம்பி அண்ட கடாஹத்துக்கு அவ்வருக்காகக் கிளர்ந்த மையத்திலே, இவ்வுலகங்கட்கெல்லாம் நம்முடைய வயிறல்லது வேறு புகலில்லையென்று திருவுள்ளம்பற்றித் தன்னுடைய ஸ்வாமித்வஹேதுவாக ஏழுலகங்களையும் வாரிப்பிடித்துத திருவயிற்றினுள்ளே வைத்து ரக்ஷித்தருளி அதனால் திருமேனி புகர்படைத்தவனான பரஞ்சோதிப் பெருமானை நினைக்க மாட்டாதவாகளுக்கு மேற்பட்ட நீசரில்லை என்றாராயிற்று.

English Translation

When the terrible dark deluge came rushing, wreaked havoc, and rose above the Earth, the Lord contained the golden worlds in his huge stomach. Those who do not contemplate the dark-hued radiant Lord and protector are indeed lowly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்