விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேய்இருக்கும் நெடுவெள்ளம்*  பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,* 
    தாய்இருக்கும் வண்ணமே*  உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*
    போய்இருக்க மற்றுஇங்குஓர்*  புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,*  பெற்ற- 
    தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ*  மாட்டாத தகவுஅற்றீரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடு வெள்ளம் – மஹாப்ரளய வெள்ளமானது
பெரு விசும்பின்மீது ஓடி – ஆகாசத்தின்மேல் வழிந்தோடி
பெருகுகாலம் –  பிரவஹித்த காலத்திலே
தாய் இருக்கும் வண்ணமே – பெற்றதாய்போல(ப்பரிந்து)
உம்மை – உங்களை

விளக்க உரை

மனிசர் முதலானார் ஒருவருமில்லாமையாலே பேய் பிசாசுகளே இருக்க வேண்டும்படியாக மஹாப்ரளய வெள்ளமானது அண்டகடாஹத்தின் மேலுஞ்சென்று பெருகப் புகுந்த காலத்திலே, பெற்றதாய்போலப் பரிந்துவந்து உங்களையெல்லாம் வாரித்திரட்டித் திருவயிற்றிலே வைத்து உஜ்ஜிவிப்பித்தவனான எம்பெருமான் திருவுள்ளமுகக்கும் படியாக அவனைத் துதித்தல் ப்ராப்தமாயிருக்க, அது செய்யாதே அவன் திருவுள்ளம வெறுக்கும்படியாகச் சில க்ஷுத்ர தெய்வங்களை நீங்கள் கொண்டாடுவதானது, பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே விட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போலிராநின்றதென்று இழித்துரைக்கிறார். உய்யக்கொண்டான் போயிருக்க ஸ்ரீஉஜ்ஜிவிப்பித்தருளின எம்பெருமான் இருக்கையில் அவனை விட்டு என்றும் பொருள் கொள்ளலாம். பெற்றதாயிருக்க மணைவெந்நீராட்டுதிர்= ‘மணை’ என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி. ‘வெந்நீராட்டுதிர்’ என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி. ‘மணைவெந்நீராட்டுமாபோலே செய்கின்றீர்’ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கிச் சொல்லியிருப்பதன் கருத்து யாதெனில், தேவதாந்தரபஜனம் பண்ணுவதோடு மணைநீராட்டுவதோடு ஒருவாசியில்லை; இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்குமுள்ள அபேதத்தைக் காட்டினபடியாம். மாதர்கள் பிரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல் மலைநாட்டு வழக்கமாக வெகுமுற்காலத்தில் இருந்ததாம்; பிரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால் அத்தாய்க்குப் பதிலாக ஒருமணைக் கட்டையை ஸ்நானஞ் செய்விப்பது இடைக்காலத்து வழக்கமாக இற்றைக்கும் நடந்துவருகின்றதாம்; அதனைத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறபடி என்று சிலர் சொல்லுவர். நம்மாழ்வார்திருவாகிரியத்தில் ஆறாம்பாட்டில் “ஈன்றோளிருக்க மணைநீராட்டி” என்றருளிச் செய்ததுங் காண்க.

English Translation

Devotees! When monstrous deluge flooded the land, the Lord protected you in his stomach just as your mother bore you in her womb, Leaving him aside, you go and celebrate some new god, like leaving out the mother-cow when bathing the new-born calf. How utterly heartless you are!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்