விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெற்றிமேல் கண்ணானும்*  நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,* 
    ஒற்றைக்கை வெண்பகட்டின்*  ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*
    வெற்றிப்போர்க் கடல்அரையன்*  விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,* 
    கொற்றப் போர்ஆழியான்*  குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொற்றம் போர் ஆழியான் – யுத்தங்களில் வெற்றிபெறுகின்ற திருவாழியை யுடையனான எம்பெருமானுடைய
குணம் – திருக்குணங்களை
பாவா – துதிசெய்கில்லாத
சிறு தொண்டர் – க்ஷுத்ரஜனங்களுடைய
கொடிய ஆறு ஏ  – கொடுத்தன்மை இருக்கிறபடி என்னே!

விளக்க உரை

நெற்றியில் கண்ணுடையோம் என்று செருக்குக் கொண்டிருக்கிற ருத்ரனும், இடைவிடாது வேதவாக்கியங்களை உச்சாரித்துக் கொண்டிருக்கிற நான்முகக்கடவுளும், ஐராவத யானையை ஏறி நடத்துகின்ற தேவேந்திரனும் மற்றுமுள்ள அமரர்களுமான யாவரையும் பிரளயப் பெருங்கடல் கொள்ளைகொண்டு விழுங்காவண்ணம் தன் திருவயிற்றிலே அடக்கிவைத்து ரக்ஷித்த ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை ஸங்கீர்த்தனம்பண்ணுவது ப்ராப்தமாயிருக்க அது செய்யமாட்டாத நீசர்களின் கொடுந்தன்மை என்னே! என்று ஆச்சரியப்படுகிறார். பகடு - யானை; வெண்பகடு - ஐராவதமென்னும் யானை. புகட்டினொருவன் - யானையி;ன் மீதேறி நடப்பவனான ஒருவன்; தேவேந்திரனைச் சொன்னபடி. வெற்றிப்போர்க் கடலரையன் ஸ்ரீ ஸமுத்ரவெள்ளம் பெருகப் புகுந்தால் அதனை அடர்க்க வல்லார் வேறொருவரும் இல்லாமையாலே ‘ஜய சீலனான கடலரையன்’ எனப்பட்டது.

English Translation

All the gods, -inclusive of the forehead-eyed Siva, the chart-tongued Brahma and the white-elephant-rider Indra, -were saved from the devouring mouth of the deluge and swallowed by the Lord for safety. Yet they never praise the benevolence of our discus-wielding Lord. Oh, the wickedness of these petty gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்