விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டார் இரங்க*  கழியக் குறள்உருஆய்,* 
    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் காண்ஏடீ,*
    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் ஆகிலும்* 
    விண்டுஏழ் உலகுக்கும்*  மிக்கான் காண் சாழலே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்டார் – பார்த்தவர்களெல்லாரும்
இரங்க – மனமிரங்கும்படி
கழிய குறள் உரு ஆய் – மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு
வண்தாரான் – வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய
வேள்வியில் – யாகபூமியிலே

விளக்க உரை

ஈற்றடியில் வண்டு என்றது ‘விஷ்ணு’ என்ற வடசொல்லின் விகாரமாகவுமாம் ‘விள்’ என்னும் வினைப்பகுதி யடியாப்பிறந்த வினையெச்சமாகவுமாம்.

English Translation

"Aho, Sister! it was a pitiable sight, -he come as a small manikin to the generous Mabali;s sacrifice and begged for a piece of land, see!". "But though he begged for a piece of land in the generous Mabali;s sacrifice, he cannot be contained even by the seven worlds, so tally!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்