விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்- 
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்- 
    ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏச – ஏசும்படியாக
ஆய்ப்பாடி – ஏசும்படியாக
தாழ் குழலார் வைத்த – தாழ்ந்த கூந்தலையுடைய இடைப்பெண்கள் சேமித்து வைத்திருந்த
தயிர் – தயிரை
உண்டான் காண் – வயிறா உட்கொண்டவன்ன்றோ

விளக்க உரை

தோழீ! நீ உகக்கிற பெருமான் அவாப்தஸமஸ்தகாமனாக இருந்தாலன்றோ விசேஷம்; அவனுடைய சரித்திரங்களை ஆராய்ந்தால் அவனும் நம்மைப் போலவே பிறர் பொருள்களில் விருப்பமுள்ளவனாகக் காணப்படுகிறானேயல்லது அவரப்தஸமஸ்தகாமனாகக் காணப்படவில்லையே. ஆய்ப்பாடியில் கண்ணானாய்ப்பிறந்து கள்ளவழியால் தயிர்வெண்ணெய் பால் முதலியவற்றை வாரியுண்டான் எனத் தொரிய வருவதால் இங்ஙனம் பிறர் பொருள்களில் ஆசையுள்ளவன் பரமபுருஷனாயிருக்கத் தகுமோ? என்ன; அதற்கு மறுமொழி கூறுகின்றான் மற்றொத்தி. தோழீ!, திருவாய்ப்பாடியில் இடைச்சிகள் சேமித்துவைத்திருந்த தயிரை அமுது செய்தானென்பது உண்மையே; நம்முடைய வயிறு போலே ஏதேனும் சிலவற்றை உண்டு நிறைந்துவிடுகிற திருவயிறோ அவனது? காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டும் ஆராவயிற்றானாயிருப்பவன் காண். ஷப்தலோகங்களையும் வாரித் திருவயிற்றினுள் இட்டாலும், இன்னமும் இப்படிப் பதினாயிரமுலகங்களை யிட்டாலும் நிறைப்போலே வயிற்றை நிறைக்கவேணுமென்கிற எண்ணத்தினால் தயிர்முதலியவற்றை அவன் வாரியுண்பவனாகில் அவனுடைய அவரப்தஸமஸ்த காமத்வத்திற்குக் குறையுண்டாகும். அடியவர்களுடைய ஹஸ்தஸ்பர்சமுள்ளதொரு பொருளாலல்லது தரிக்கமாட்டாத மஹா குணத்தை வெளியிடவேண்டித் தாழ் குழலார்வைத்த தயிருண்டானத்தனையாகையாலே கொண்டாடத்தக்க எளிமைகாண் இது, என்றளாயிற்று.

English Translation

"Aho, Sister! With the whole world heaping slander, the Alappadi son ate the curds kept by braided-hair dames, See!". "Yes, but the golden stomach that filled itself with braided-hair dames" curds swallowed these seven worlds and still had space for more. So tally!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்