விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான்அமரும் மென்நோக்கி*  வைதேவிஇன் துணையா,* 
    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்தான் காண்ஏடீ*
    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்த பொன்அடிக்கள்,* 
    வானவர்-தம் சென்னி*  மலர்கண்டாய் சாழலே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் அமரும் – மானையொத்த
மெல் நோக்கி  – மென்மையான கண்களை யுடையவளான
கைதேவி – விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை
இன் துணை ஆ – இனிய துணைவியாகக் கொண்டு
கான் அமரும் – காட்டிலே பொருந்திய

விளக்க உரை

முன்னடிகள் ஒருத்தியின் பரசுரம், பின்னடிகள் மற்றொருகத்தியின் பரசுரம். முன்னடிகளால் ஸௌலப்யகுணம் வெளியிடப்படுகிறது, பின்னடிகளால் பரத்வகுணம் வெளியிடப்படுகிறது. தோழீ! எங்கள் பெருமான் மிகச் சிறந்தவன், உபயவிபூதிநாதன் என்கிறாயே; அஃது உண்மையாயின். அப்ராக்ருதமான வொரு தேச விசேஷத்திலே “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறபடியே யிருந்துகொண்டு மேன்மையாக விளங்கமாட்டானோ? இந்த இருள்தரு மாஞாலத்தில் வந்து பிறந்தான்; தசரத சக்ரவர்த்திக்கு மூத்தமகனாய்ப் பிறந்து வைத்தும் அரசுரிமையை யிழந்து தன் பெண் பெண்டாட்டியையுங் கூட்டிக்கொண்டு கல்லும் முள்ளுமான காட்டிலே கால்நோவ நடந்து சென்றானே மேன்மையுடையார்படி இதுவோ! என்றாள் ஒருத்தி. ஐயோ! பரத்வத்தோடே கூடினவிடத்தில் உள்ள ஸௌலப்யம் கொண்டாடத் தகுந்ததென்பதை அறிந்திலையே; கானமருங் கல்லதர்போய்க் காடுறைந்தான் என்பதை மாத்திரம் பேசுகிறாயேயன்றி, அப்படி நடந்த திருவடிகளையே வானவர்கள் சென்னிக்கு மலர்ந்த பூவாகக் கொள்ளுகிறார்களென்பதை அறிந்திலையே! வானவர்களின் தலைகளிலேயே யிருக்கவேண்டிய அத்திருவடிகள் ஆச்ரித ரக்ஷணார்த்தமாகவன்றோ காடுறைந்தன; துஷ்டநிக்ரஹ சிஷ்டபாரியாலநங்களை ஸங்கல்பமாத்திரத்தினால் செய்துவிடாமல் கைதொட்டுச் செய்து நிறம்பெற வேணுமென்கிற விருப்பத்தினால் சிஷ்டர்களான மஹர்ஷிகளும் துஷ்டர்களான அசுர ராக்ஷஸர்களும் இருந்தவிடங்களைத் தேடித்திரிந்து நடந்துசென்று காரியம் பார்த்த மஹாகுணம் அறியாயோ? என்கிறாள் மற்றொருத்தி.

English Translation

"Aho, Sister! Your hero took the rocky forest path with his fawn-eyed Vaidehi, and lived in the wilderness, see!" "Yes, but the golden feet that trad the rocky forest path become the flowers that the celestials wore on their heads, so tally!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்