விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி*  அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர* 
    செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்*   அடிமூன்று இரந்து பெறினும்,*
    மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச*   மலரோன் வணங்க வளர்சேர்,* 
    அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்*  அது நம்மை ஆளும் அரசே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெம் திறல் – கொடிய வலிமையையுடையனான
வாணன் – மஹாபலியினுடைய
வேள்வி இடம் – யாகபூமியிலே
அங்கு ஓர்  குறள் ஆகி – விலக்ஷணவாமனமூர்த்தியாய்க் கொண்டு
எய்தி – எழுந்தருளி

விளக்க உரை

வாமநாவதாரத்தையும் த்ஜீவிக்ரமாவதாரத்தையும் ஒருங்கே அநுபவித்துப் பேசும் பாசுரம் இது. மாவலி ஔதாரயத்தில் மிக்க ப்ரஸித்திபெற்றிருக்கச் செய்தேயும் தேவாக்ளின் குடியிருப்பை அழிக்கும்படியான மிக்க திறல்கொண்டிருந்ததனால் ‘வெந்திறல் வாணன்’ எனப்பட்டது. அவனுடைய யஜ்ஞ பூமியில் வாமநமூர்த்தி யெழுந்தருளும்போது வேத வாக்கியங்களை ஆவ்ருத்தி செய்துகொண்டே யெழுந்தருளினமையால் “வேதநாலின் முனியாகி” என்றது. ‘இவன் உண்மையான பிரமசாரிதான்’ யாசகஞ்செய்யவே வந்திருக்கிறான்; என்று மாவலி நினைக்கும்படியாகச் செய்த செயலாதலால் ‘மெய்ம்மையுணர’ எனப்பட்டது. செந்தொழில் வேதம்=யஜ்ஞம் முதலிய நல்ல அநுஷ்டானங்களுக்கு உபயோகப்படுகிற வேதம் என்றபடி. முன்னடிகளிரண்டாலும் வாமநாவதாரச் செயலைப் பேசிப் பின்னடிகளால் த்ஜீவிக்ரமாவதாரச் செயலைப் பேசுகிறார். இப்பின்னடியையே திருநெடுந்தாண்டகத்தில் “ஒண்மிதியிற் புனலுருவியொருகால் நிற்பவொருகாலுங் காமருசீரவுணனுள்ளத்து, எண்மதியுங் கடந்தண்டமீது யோகயிரு விசும்பினுடு போயெழுந்து, மேலைத் தண்மதியுங்கதிரவனுந் தவிர வோடித்தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு, மண்முழுது மகப்படுத்து நின்ற வேந்தை மலர் புரையுந் திருவடியே வணங்கினேனே” என்ற பாசுரத்திற்பன்னி யுரைத்திருப்பது காண்க.

English Translation

The Lord of Sri, Bhu and Nila once came with a battleaxe and destroyed twenty one crowned kings in battles. He is the one who swallowed the universe and remade if from his stomach, That Avatara is our protector and king forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்