விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்*   வளநாடு மூட இமையோர்* 
    தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன*   அரண்ஆவன் என்னும் அருளால்* 
    அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி*   அகல் வான்உரிஞ்ச,*  முதுகில்- 
    மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை*   மறவாது இறைஞ்சு என் மனனே!   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உம்பர் – மேலுலகத்தவாக்ளுடைய
வளம் நாடு – செழிப்புற்றிருந்த ஸ்தானங்களை
மூட – வியாபித்தவளவிலே
இமையோர் – தேவர்கள் (அஞ்சிநடுங்கி)
எமக்கு – எங்களுக்கு

விளக்க உரை

‘நிலையிடமெங்குமின்றி’ என்றது நெடு வெள்ளத்திலும் அந்வயிக்கலாம், இமையோரிலும் அந்வயிக்கலாம்; நிலைகொள்ளலாவதோரிடமுமில்லாமல் ஆழங்காலாயிருக்கிற நெடுவெள்ளம் என்னவுமாம்; ஒரிடத்தில் நில்லாதே அலைந்துவருகிற நெடுவெள்ளம் என்னவுமாம். இனி இமையோர்களிடத்து அந்வயிக்கும்போது; நெடு வெள்ளமானது உம்பர்வளநாட்டை மூடினவளவிலே இமையோர்க்ள் (எங்கும் நிலையிடமின்றி) ஓரிடத்திலும் கால்பாவி நிற்கமாட்டாமல் என்பதாகப் பொருள்கொள்க. இமையோர்கட்கு நிலையிடம் அமைத்துக் கொடுப்பதற்காகவே எம்பெருமான் மீனாய்த் திருவவதாரித்துக் கடலினுள்ளிருந்த குலமலைகளைத் திருமுதுகிற் சுமந்து கொண்டுவந்து வெளிப்படுத்தினனென்க. ‘தலையிடமற்று’ என்பதை ‘தலை இட மற்று’என்றும் ‘தலை இடம் அற்று’ என்றும் பிரிக்கலாம். முந்தின யோஜனையில் இமையோர்க்ளின் வார்த்தையாகும். ‘இப்படிப்பட்ட மஹரப்ரளய ஆபத்தைப் போக்கவேணும்’ என்று நாங்கள் ஒருவன் காலிலே தலையைமடுப்பதற்கு உன்னையொழிய வேறொரு நாதனையுடையோமல்லோம் என்று தேவர்கள் முறைப்பட,’நான் இருக்க நீங்கள் அஞ்சவேணுமோ? நான் ரக்ஷிக்கிறேன்’ என்று தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அருந்தொழில் செய்த எம்பெருமானை மனமே! ஒருநாளும் மறவாது இறைஞ்சு என்கிறார். “ஸர்வாதிகனான ஸர்வேச்வரன் தன்னுருக்கெடுத்து வேற்றுருக்கொண்டு அரியன செய்து ரக்ஷியாநின்றான்; உனக்குச் செய்யவேண்டும் அருந்தேவை அவனை மறவாதிருக்கை; இத்தனையும் செய்யப்பாராய்; மறக்கவொண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாதிருக்க வேண்டாவோ?” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்க.

English Translation

When the whole world was deep in deluge waters, even the gods above were made to live in fear. "Lord our Master! Sole Refuge, O! Maker! Grant us a place to be", they said, Lord! You came then as fish in deep ocean, hauling mountain-like rocks on thy frame, splashing mirthfully, gliding on your belly I praise, and never fail, O Heart! the Avatara!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்