விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைத்தார் அடியார்*  மனத்தினில் வைத்து,*  இன்பம்-
    உற்றார் ஒளிவிசும்பி*  ஓரடிவைத்து,*  ஓரடிக்கும்-
    எய்த்தாது மண்ணென்று*  இமையோர் தொழுதிறைஞ்சி,*
    கைத்தாமரை குவிக்கும்*  கண்ணன் என் கண்ணனையே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர்அடிக்கும் –  மற்றொரு திருவடிக்கு
மண் எய்த்தாது என்று – பூமி போதாதே! ஏன்று
இமையோர் – (பிரமன் முதலிய) தேவர்கள்
தொழுது எத்தி – வணங்கித் துதித்து
கை – தங்களுடைய கைகளை

விளக்க உரை

எம்பெருமானை நான் எப்படி மனத்திற் கொண்டேனோ அப்படியே அவனை மனத்திற் கொள்வார்க்கெல்லாம் பரமாநந்தம் ஸித்தம் என்கிறாள். மாவலி கையில் நீரேற்று ஒரு திருவடியை மேலுலகத்திலே பரப்ப வைத்து மற்றொரு திருவடியை நிலத்திலே பரப்பப வைக்குமளவில் அத்திருவடிக்கு நிலம் இடம் போரவில்லையே யென்று இந்த த்ஜீவிக்ரமாப தானத்தையெடுத்துப் பேசித் துதித்து அஞ்ஜலி செய்து தேவர்களால் வணங்கப்படுகின்ற எம்பெருமானை எந்த அடியார்க்ள் மனத்தில் வைக்கின்றார்களோ, அவர்கள் வைத்தவாறே பரமாநந்தத்தைப் பெற்றவரேயாவர் என்றதாயிற்று. “ஒரடிக்கு மெய்ததாதுமண்” என்றது ஈடுபாட்டினாற் சொல்லுகிற வார்த்தை. ‘பிரானுன்பெருமை பிறராரறிவார், உராயுலகளந்த நான்று-வராகத் தெயிற்றளவு போதாவாறென்கொலோ? ஏந்தையடிக்களவு போந்தபடி.” (முதல் திருவந்தாதி 84) என்ற வேறொரு சமத்காரமாகப் பேசினாருமுளர்.

English Translation

When the Lord raised his one foot into the bright sky, the gods gathered and showered praise saying. "The Earth is not sufficient to another stride". They folded their hands to my krishna, dear as eyes. Devotees always place him in their hearts and exult.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்