விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுவார்க்கு,*
    தம்மையே ஒக்க*  அருள்செய்வர் ஆதலால்,*
    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுதிறைஞ்சி,*
    தம்மையே பற்றா*  மனத்தென்றும் வைத்தோமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி –  எப்போதும் த்ரிகரணங்களாலும் நமஸ்காரித்து
தம்மையே – அவர்தம்மையே
என்றும் – எப்போதும்
பற்று ஆ – புகலாக
மனத்து வைத்தோம் – உறுதி கொண்டோம்.

விளக்க உரை

தேவதாந்தர பஜனத்தை நெஞ்சிலும் நினையாதவர்களாய் ப்ரயோஜநாந்தாத்தையும் சிந்தையிற் கொள்ளாதவர்களாய் ஆச்ரயிக்கின்ற பக்தர்களுக்குத் தம்மோடு பரமஸாம் யாபத்தியைத் தந்தருள்பவரான எம்பெருமானையே நாம் இடைவிடாது வணங்கி, அவரையே சரணமாக உறுதிகொண்டோமென்கிறாள். தம்மையே பற்றா=பற்றாக என்றபடி. அவரையே பரமப்ரயோஜநமாகக் கொண்டோ மென்னவுமாம். ஊபாயம் உபேயம் என்ற இரண்டும் அவரேயாகக் கொண்டோ மென்றதாயிற்று.

English Translation

For those who worship him alone, He gives the qualities that belong to him alone. And so we shall forever praise him alone, cultivating a heart that goes to him alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்