விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து*  அரிமாச்செகுத்து,*
    ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு*  வன் பேய்முலை-
    வாங்கி உண்ட,*  அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
    ஏங்கு வேய்ங்குழல்*  என்னோடாடும் இளமையே!.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரி மா – (கேசியென்ற) சத்துருவான குதிரையை
செகுத்து – கொன்றவனாயும்
ஆங்கு – கம்ஸனது அரண்மனை வாசலிலே
வேழத்தின் – குவலயாபீடமென்கிற யானையினுடைய
கொம்பு கொண்டு – தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும்

விளக்க உரை

கண்ணபிரானுடைய வேணுகானம் செவிப்பட்டுப் பிரிவாற்றாதே வருந்திப் பேசுகிற ஒரு ஆய்ப்பெண்ணின் நிலைமையிலே நின்று பேசும் பரசுரமாயிற்றிது. ஸர்வசக்தனான எம்பெருமான் வாளாகிடக்க, அவனுடைய வேய்ங்குழல் என்னோடே தோள் வலிகாட்டி வருகின்றதே யென்கிறாள். முதலடியில் ‘ஆனைக் காய்ந்து’ என வலிமிகாதது வழுவன்று; வடமொழியில் சாந்தஸப்ரயோகம்போலக் கொள்ளத்தக்கது.

English Translation

The Lord broke the Marudu trees, killed the bulls, fore the horse;s Jaws, pulled out the elephant;s fusk and sucked the ogress breast with his lips, Alas, the cowherd playing his flute makes my heart flutter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்