விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கெண்டை ஒண்கணும் துயிலும்,*  என்நிறம்- 
    பண்டு பண்டு போல்ஒக்கும்,*  மிக்கசீர்த்
    தொண்டர் இட்ட*  பூந்துளவின் வாசமே,* 
    வண்டு கொண்டு வந்து*  ஊதுமாகிலே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ துளவின் - திருத்துழாய் மலரின்
வாசம் - பரிமளத்தை
வண்டு - வண்டானது
கெண்டை - கெண்டை மீன்போன்று அழகிய
ஒண் கணும் - (எனது) கண்களும்

விளக்க உரை

எம்பெருமானுடைய திருவடியிணைகளிலே பரம பாகவதர்கள் ஸமர்ப்பித்த திருத்துழாய் மலாக்ளின் பரிமளத்தைக் கொய்து கொண்டுவந்து இங்ஙனே வண்டு ஊதுமாகில் என்னுடைய கண்களும் துயில்கொள்ளும், என்னுடைய மேனியும் பழையநிறம் பெறும் என்கிறாள். ‘என்நிறம் பண்டுபோலொக்கும்’ என்னாதே “பண்டுபண்டுபோ லொக்கும்” என்றதில் ஒரு விசேஷார்த்தமுண்டு கேண்மின். இப்போதைய என் அவஸ்தைக்கு முற்பட்டதான யாதொரு அவஸ்தையுண்டோ, அதற்கும் முற்பட்டதான யாதொரு அவஸ்தையுண்டோ, அவ்வவஸ்தையில் நான் எப்படி யிருந்தேனோ அப்படி ஆவேன் என்றபடி. இதனை விவாரிப்போம்; -இப்போதைய அவஸ்தையாவது விரஹாவஸ்தை (பிரிவுநிலைமை); இதற்கு முந்திய அவஸ்தையாவது ஸம்ச்லேஷாவஸ்தை (கூடிக்களித்திருந்த நிலைமை); அதற்குமுந்திய அவஸ்தையாவது-பகவத் விஷய வாஸநையே தொரியாமல் அந்யபரமாகப் போது போக்கின காலம்; உண்டியே உடையே உகந்திருந்த காலம். அப்போது சாறிரம் வாடாமல் வதங்காமல் மாமை குன்றாமல் பசுகுபசுகுகென் றிருக்குமிறே. ஒரு விசாரமுமின்றி உண்டுடுத்துத் திரியுங் காலத்திலே மேனி நித்ய புஷ்டமாயிருக்கும். புகவத் விஷயத்தில் வாஸநை பண்ணிப் போந்தது முதலாக “ஸம்யோகா விப்ரயோகாந்தா” என்கிறபடியே க்ஷணகாலம் ஸம்ச்லேஷமும் நெடுங்காலம் விச்லேஷமுமாய் வ்யஸநமே மீதூர்ந்து செல்லுகையாலே, இப்போதைய விரஹாவஸ்தைக்கு முந்தியதான ஸம்ச்லேஷாவஸ்தையிலுள்ள நிறத்தைப் புகழ்ந்து கூறுதல் சிறவாதென்று, அதற்கும் முந்தியதான அந்யபரத்வாவஸ்தையில் இருந்த நல்ல நிறத்தை உத்தேசித்துப் பண்டுபண்டுபோ லொக்கும் என்றது. இங்கே பெரிய வாச்சான் பிள்ளையின் மிக வழகிய திவ்ய ஸூக்திகள் காண்மின்; “அவன் வாய் புலற்றும் நிறம் அறப்பண்டுபோலேயாம் கலக்கையாகிறது பிரிவுக்கு அங்குரமிறே; கலந்து பிரிந்து லாபாலாபங்களறியாதே பூர்ணையா யிருந்தபோதை நிறம்போலேயாம்” என்று நாச்சியார்திருமொழியில் பாணியா தென்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க வுறுதிராகில்” என்றதும் நோக்கத்தக்கது; அங்கும் இதுவே கருத்தென்க. (மிக்க சீர்த் தொண்டரிட்ட) தொண்டர், சீர்த்தொண்டர் மிக்க சீர்த்தொண்டர் என மூவகைப்படுவர் கைங்காரிய பரர்கள். க்ஷுத்ர பலன்களை விரும்பி அடிமைபூண்டிருப்பவர்கள் தொண்டர் சிறந்த புருஷார்த்தத்தை விரும்பி அதற்கு உபாயாநுஷடாநம்போல அடிமை பூண்டிருப்பவாக்ள் சீர்த்தொண்டர் ஒரு பலனையும் பேணாதே ஸ்வயம்ப்ரயோ ஜநமாகக் கைங்காரியம் செய்துவரும் அநந்ய ப்ரயோஜநாதிகாரிகள் மிக்க சீர்த்தொண்டர் அப்படிப்பட்டவாகள் ஸமர்ப்பித்த புஷ்பங்களின் பரிமளத்தையாயிற்று இங்கு விரும்புவது.

English Translation

If only the bumble-bee blows over me –the fragrance of the cool Tulasi frbmj garlands woven by meritorious devotees my fish-like eyes may find some sleep, my colour may return like old.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்