விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சென்றுவார்*  சிலை வளைத்து இலங்கையை- 
    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,*
    முன்றில் பெண்ணைமேல்*  முளரிக் கூட்டகத்து,* 
    அன்றிலின் குரல்*  அடரும் என்னையே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வளைத்து - (நானேற்றி) வளையச் செய்து
இலங்கையை - லங்காபுரியை
வென்ற - அழித்த
வில்லியார் - வில்வல்லவரான பெருமானுடைய
வீரமே கொலோ - பராக்ரமமடியாகவோ

விளக்க உரை

உண்ணாது உறங்காது ஒலி கடலையு+டறத்து இலங்கை சென்று சிலை வளைத்து அம்பு எய்து செய்த செயலெல்லாம் என்னைப் போன்ற வொரு பிராட்டிக்காகவேயன்றோ; அவளிடத்துப்போல என்னிடத்தும் இரக்கங்காட்டிக் காரியஞ் செய்ய வேண்டியிருக்க அது செய்யாதே எதிரிகளிடத்திற் காட்டின வீரத்தையே என்னிடத்திலுங்காட்டவேண்டி இங்ஙனே அன்றிலின் குரலையிட்டு அடர்க்கிறார்போலும்! என்கிறாளாயிற்று. பாரிவுக்கு இலக்காக்காதே பராக்ரமத்துக்கோ என்னை இலக்காக்கிற்று! என்கிறாள். முன்றில் - இல்முன். பெண்ணை - பனைமரம். முளரிக் கூட்டகத்து “தாமரைப் பூவாலும் தாதாலும் தண்டாலும் செய்த கூட்டிலே கிடக்கிற” என்பது வியாக்கியானம்.

English Translation

The Lord wielded his bow and vanquished the city of Lanka, Is it to speak of his valour now, that the Anril birds pairing in a nest of lotus twings, high on the Palm tree in the front yard, coil incessantly and hurt me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்