விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,*  மாமழை- 
    அன்று காத்த அம்மான்,*  அரக்கரை-
    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,?*
    தென்றல் வந்து*  தீ வீசும் என்செய்கேன்!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வென்ற - கொன்றொழித்த
வில்லியார் - வில்லையுடையருமான பெருமாளுடைய
வீரமே கொலோ - பராக்ரமத்தினாலோ
தென்றல் வந்து தீ வீசும் - தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது!
என் செய்கேன் - (இதற்கு) என்ன பண்ணுவேன்!

விளக்க உரை

(தென்றல்வந்து தீ வீசும்: (இது) ஞ்.வில்லியார்வீரமே கொலோ) தென்றலோவென்னில் பொதுவாக எல்லார்க்குங் குளிர்ச்சியைப் பண்ணாநின்றது; அதுதானே என்னளவில் நெருப்பை உமிழாநின்றால் இது தனக்கு ஒரு ஹேது இருக்கவேணுமே; குன்றெடுத்து மழைதடுத்து, வி;ல்லெடுத்து அரக்கரை மடித்தவர் இந்திரனிடத்திலும் அரக்காரிடத்திலும் காட்டின வீர;யத்தை என்னிடத்திலுங் காட்டவேண்டி இத்தென்றலைத் தீ வீசுமாறு ஏவினா; போலும்; “ரிஷாஹாதுதாவதெ” என்ற உபநிஷத்தின்படி அவர்க்கு அஞசி நடுங்கி உலாவக்கடவதன்றோ காற்று; அது தீ வீசும்போதைக்கு அவருடைய ஸங்கல்பமே அடியாயிருக்கவேணுமிறே என்கிறாள்.

English Translation

The Lord lifted a mountain and stopped the rains. He is the bow-wielder who destroyed the Rakshasas. Alas! The breeze fans my love fire. Is this any sign of his valour? I do not know!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்