விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இங்கே போதும்கொலோ,*
    இனவேல்நெடுங் கண்களிப்ப,*
    கொங்குஆர் சோலைக்*  குடந்தைக் கிடந்தமால்,*
    இங்கே போதும்கொலோ!  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கு ஆர் - தேன்நிறைந்த
சோலை - சோலைகளையுடைய
குடந்தை - திருக்குடைந்தையிலே
கிடந்த - திருக்கண்வளர்ந்தருளாநின்ற
மால் - எம்பெருமான்,

விளக்க உரை

ஸ்வாமியானவன் அடியானுள்ளவிடத்தே தானே எழுந்தருளிக் கைக்கொள்ளுதல் முறைமையேயன்றி ஸ்வாமியைத் தேடி அடியான் செல்லுதல் இரண்டு தலைக்கும் அவத்யம் என்பது ஸத்ஸம்ப்ரதாயம். அசோகவனத்தில் பிராட்டி பொறுக்க வொண்ணாத துன்பங்களை அநுபவித்து வருந்திக்கிடக்குமளவில் திருவடி சென்று ‘ஸீதே! என்தோளிலே வீற்றிரும்’ ஒரு நொடிப் பொழிதிலே உம்மை இராமபிரான் ஸந்நிதானத்திலேகொண்டு சேர்த்திடுவேன்; என்ன, அதற்குப் பிராட்டி “சரைஸ்து ஸங்குலாம் க்ருத்வால ங்காம் பரபலார்த்தந, மாம் நயேத்யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய ஸத்ருசம் பவேத், என்றாள். சக்ரவர்த்தி திருமகனார் தாமே எழுந்தருளி இலங்கையைப் பொடிபடுத்தி என்னை மீட்டுக்கொண்டு போவாராகில் அதுவன்றோ தகுதி யென்றாள். ஸொத்தைப் பெற்று மகிழவேணுமென்னுமாவல் ஸ்வாமிக்கு இருப்பதே தகுதியாகும். அந்த முறைமைப்படியே இப்பாட்டில் “கொங்கார்சோலைக் குடந்தைக் கிடத்தமால் இங்கே போதுங்கொலோ என்கிறாள். ஏதுக்காக அவர் இங்கு எழுந்தருள வேணுமென்ன, இனவேல் நெடுங்கண்களிப்பு என்கிறாள். கண்ணாரக்காண்பதற்குமேலே வேறொரு ப்ரயோஸனமில்லை யென்றிருப்பாக்ள் முந்துறமுன்னம் காணப்பெற்ற பின்பு அணையவேணுமென்றிருப்பர்கள்; அணையவும் பெற்றால் இதற்கு ஒருகாலும் இடையூறுவாராமே இவ்விருப்பு நித்யமாய்ச் செல்ல வேணுமென்றிருப்பாக்ள். போதும் - போதரும்.

English Translation

Will he come this way? Pleasing my dark and vel-like two eyes, kudandai Lord amid nectored groves, -will he come this way?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்