விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துவர்ஆடை உடுத்து*  ஒருசெண்டு சிலுப்பி,* 
    கவர்ஆக முடித்து*  கலிக்கச்சுக் கட்டி,*
    சுவர்ஆர் கதவின் புறமே*  வந்து நின்றீர்,*
    இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துவர் ஆடை - சிவப்பு நிறமான திருப்பரியட்டத்தை
உடுத்து - சாத்திக்கொண்டு
ஒரு செண்டு சிலுப்பி - ஒருசெண்டையும் கையால்) சிலுப்பிக்கொண்டு
கவர் ஆக முடித்து - (கிருக்குழலை) வாரிமுடித்து,
கலி கச்சு கட்டி - வலியகச்சுப்பட்டையை (இடுப்பில்) கட்டிக்கொண்டு

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கலிங்க முடுத்து வந்தமை கூறப்பட்டது, இப்பாட்டில் துவராடை யுடுத்தமை கூறப்படுகின்றது, கண்ணபிரான் வரும்போதே துவராடையையும் சுருட்டியிடுக்கிக் கொண்டு வந்தான் போலும், கலிங்க முடுத்து வந்த்தற்கு இவள் ஈடுபடக் காணாமையாலே துவராடையை யுடுத்துக்காட்டுவோம், அதிலாகிலும் ஈடுபடுகிறாளோ பார்ப்போம் என்றெண்ணித் துவராடையை உடுத்துக் கொண்டானாயிற்று. (ஒரு செண்டு சிலுப்பி) கையிலே ஒரு பூஞ்செண்டைச் சிலுப்பிக்கொண்டு வந்தானாயிற்று. சிலுப்புதல் - அசைத்தல். (கவர் ஆகமுடித்து) கவர் - இரண்டாகப் பிரிகை, எனவே, குழலை வாரி முடித்து என்றதாயிற்று, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “மயிரைப் புகுந்து முடித்து“ என்றதில் “புகுந்து“ என்றது அச்சுப்பிழை, பகுந்து“ எனத்திருத்துக. பகுத்தல் -அலகலகாக வாருதல். (கலிக்கச்சுக் கட்டி) மிகப் பெரிய ஆற்று வெள்ளத்தில் இழிவாரைப்போலே குழலைவாரி முடித்துக் கொண்டும் வலிய கச்சுப்பட்டையை அரையிலே இறுக்கிக் கட்டிக்கொண்டும் இங்குப் போகவேள்ளத்திலே அவகாஹிக்க வந்தான் போலும். வந்தவன் ஆய்ச்சியினுடைய முகக்குறியைக் கண்டவாறே தைரியமாக உள்ளுப் புகமாட்டாமல் சுவரார்ந்த கதவுக்குப் புறம்பே நின்றானாயிற்று, அதைத் தானறிந்தமை சொல்லுகிறாள் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் என்று. கண்ணபிரான் அந்த வார்த்தையையே அவகாசமாகப் பற்றிக்கொண்டு அணுகிச் சென்று மடிபிடிக்கப் புகுந்தான், புகவே இவரார்? இதுவென் இதுவென் இதுவென்னோ? என்கிறாள்.

English Translation

Wearing a red vestment on your person, tossing a ball casually, -your coiffure secured loosely, -wearing a frilled headband, you come and stand by the half-closed door. Who are you? O, what is this, What is this, What is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்