விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈடும் வலியும் உடைய*  இந் நம்பி பிறந்த எழு திங்களில்,* 
    ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி*  யமுனை நீராடப் போனேன்,*
    சேடன் திருமறு மார்வன்*  கிடந்து  திருவடியால்,*  மலை போல்-
    ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை*  உரப்புவது அஞ்சுவனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வளர்த்தி - கண்வளரச்செய்துவிட்டு
எமுனை நீரான போனேன் - யமுனையிலே குளித்துவரப் போனேன்
சேடன் - மிக இளம்பிள்ளையாய்
திரு மறு மார்பன் - பிராட்டியையும் ஸ்ரீவத்ஸத்தையும் திருமார்பிலுடையனான இவன்
கிடந்து - தான் படுத்துக்கொண்டிருந்தபடியே

விளக்க உரை

ஈடும் வலியுமுடைய -ஈடு என்றாலும் வலி என்றாலும் பொருள் ஒன்றேயாயினும் இங்கு வாசி கொள்ளலாம், ஈடு என்று தேஹபலத்தைச் சொல்லுகிறது, வலி என்று எதிரிகளை அநாயாஸமாக அடர்க்கும் வல்லமையைச் சொல்லுகிறது. வடமொழியில் சௌர்யம் வீர்யம் பராக்ரமம் என்று சொல்லப்படுகிற குணங்களுக்குக் கூறப்படும் பொருள் வாசியை நினைப்பது. ஏழுதிங்களில் -ஏழாவது திங்களில் என்றபடி. திங்கள் -சந்திரன், அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதமெனக் கொண்டு சந்திர ஸம்பந்தத்தாற் காலத்தை வரையறுக்கும் சாந்தரமாநரீதி பற்றித் திங்கள் என்று மாதத்திற்குப் பெயர் வழங்கலாயிற்று, இலக்கணை. இங்கு ‘ஏழுதிங்களில்’ என்றது மிக்க சிறு பிராயத்தில் என்றபடி. (ஏடலர்கண்ணயினானை வளர்த்தி) குழந்தையைப் பூமாலையினா லலங்கரித்து உறங்கப்பண்ணின ளென்க.

English Translation

In the seventh month after this strong and able flower-garlanded Lord was born, I put him to sleep and went to bathe in the river Yamuna. This Sri-chested Lord lay as he was and kicked a speeding mountain-like cart to smithers with his tender foot. After that, I too am afraid to scold him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்