விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்*  ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,* 
    ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்*  நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*
    சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று*  இரப்பன் உரப்பகில்லேன்* 
    பேய்ச்சி முலைஉண்ட பின்னை*  இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நறு நெய்யும் - மணம் மிக்க நெய்யையும்
பாலும் - பாலையும்
ஓரோ குடம் - ஒவ்வொரு குடத்தில் நின்றும்
துற்றிடும் என்று - (கண்ணன்) அமுது செய்து விடுவனென்று
ஆய்ச்சியர் - இடைச்சிகளெல்லாரும்

விளக்க உரை

பெற்ற தாயாகிய யசோதை கண்ணபிரானை இப்படி ஆணாடவிட்டிருக்கிறாளே!’ இதுவும் தகுதியோ? மக்களை அடக்கியாள வேண்டிய முறைமை தாயர்க்கன்றோ கடமை, அவள் இப்படி உபேக்ஷித்திருப்பது சிறிதும் தகாது, தயிரும் பாலும் நெய்யும் அவரவர்கள் பறிகொடுத்துப் படும் பரிபவமும் பரிதாபமும் வாசாமகோசரமாயிருக்கின்றதே! இப்படியும் ஒருத்தி தன் மகனைத் தீம்பிலே தடிக்கவிட்டிருப்பளோ! என்றிப்படி ஊரெல்லாம் அலர் தூற்றல் பரவினவாறே யசோதைப்பிராட்டி ஒருத்தியை நோக்கியுரைக்கின்றாள்.

English Translation

O Lady Yasoda! All the cowherd dams warned me that this fellow will empty every pitcher of milk, curds, Ghee and buttrmilk, Heeding them, I called him up, and only pledded, -did not scold, -"O Lord, I beg of you, please doe not do this", After he sucked the ogress breast, I am afraid to even talk to him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்