விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று*  ஆயர் விழவுஎடுப்ப,* 
    பாசனம் நல்லன பண்டிகளால்*  புகப் பெய்த அதனை எல்லாம்,*
    போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு*  உன்மகன் இன்று நங்காய்,* 
    மாயன் அதனை எல்லாம் முற்ற*  வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

போய் இருந்து - போயிருந்து
ஒரு பூதம் வடிவு கொண்டு - ஒரு பூதத்தின் வடிவைப் பூண்டு
அதனை எல்லாம் முற்ற - அவை முழுவதையும்
வளைத்து வாரி - (கைகளால்) வாரித்திரட்டி
உண்டிருந் தாண்டோலும் - உட்கொண்டானானாயிற்று

விளக்க உரை

இப்பாட்டில் ‘அதனை யெல்லாம்’ என்பது இரண்டாமடியிலும் ஈற்றடியிலுமாக இரண்டு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது, * அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிரவாவியும் நெய்யளறுமாகத் திரட்டின திரளிலே ஒரு சிறு அவிழும் மிச்சமாகாதபடி அடங்கலும் துற்றினானென்பதைக் காட்டுதற்கேயாயிற்று இவ்விரட்டிப்பு.

English Translation

O Lady Yasoda! From the days of yore, the cowherd talk celebrate a festival for the thousand-eyed indra bringing cartloads of good food-offering to the hill, If seems your wonderful son went there today and, assuming a ghoul form, gobbled up all of it in one sweep!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்