விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைந்நம்பு வேல்கண்நல்லாள்*  முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
    தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது*  அவன் இவை செய்தறியான்*
    பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்*  பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,* 
    இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை*  என்செய்கேன் என்செய்கேனோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மை நம்பு - மையணிந்த
வேல் கண் - வேற்படை போன்ற கண்களையுடையளான
நல்லான் - யசோதைப்பிராட்டி யானவள்
பெற்ற - பெற்ற
வளை வண்ணம் - சங்குபோல் வெண்ணிறத்ததாய்

விளக்க உரை

நம்பி மூத்தபிரானை (பலராமனை)ப் புகழ்ந்துகொண்டு கண்ணபிரானைப் பழித்துப் பேசுகிறாளொரு ஆய்ச்சியின் பாசுரமாய்ச் செல்லுகிறது இது. “முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன்“ என்கிறபடியே வெள்ளை வெளேலென்று இக்கண்ணனுக்கு முற்பிறந்தவனான பலராமனும் இத்திருவாய்ப்பாடியில் வளர்ந்ததுண்டு, அவன் இங்கு விளையாடித் திரியும்போது நாங்கள் இப்பாடுபட்டறியோம், சூது வஞ்சனை கள்வம் ஒன்றுமறியானவன். இக்கணவிரானோ வென்னில், மெய்கலவாத பொய்யுரைகளிற் சிறந்தவன், கடைகிறபோதே பிடித்து ‘இவர்கள் எங்கே வைப்பர்களோ’ என்று அடியொற்றிக் கொண்டு திரியும்படியானவன், களவு என்னும் பொருளை வைத்துவைப்பதற்குப் பாங்கான பாத்திரமாயிருப்பவன், களவுகளை வேண்டினபடி செய்துவிட்டு ‘இக்குழந்தை இவ்வளவு காரியம் செய்யுமோ?’ என்று ஒருவரும் நம்பவொண்ணாதபடி தவழ்நடை பயில்கிறபடியை என்ன சொல்லுவேன்! இவன் இப்படி சூதும் வஞ்சகமும் கள்வமும் மிக்கவனாக இவ்வூரில் இடைச்சிகளுக்கு வாழ வழியில்லை, இவன் கீழே இச்சேரியில் எங்ஙனே குடியிருப்பே னென்கிறாள். இந்நம்பி நம்பியா – ‘நம்பியால்’ என்ற பாடம் மறுக்கத்தக்கது. ‘நம்பியா’ என்றது ‘நம்பியாக’ என்றபடி. “நிரபேக்ஷனான இவன் இவனாக, இவ்வூரில் இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகில்லை“ என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. (இவன் இவனாக) என்றது - இவன் இப்படி தீம்பில் குறையற்றவனா யிருக்கையாலே என்றபடி.

English Translation

The collyrium-lined spear-sharp-eyed; good dame Devaki had another son, too,-of pure complexion, white as a conch. He too grew up here, but he never did such things. Just see the way this rascal, repository of mischief goes crawling under like a child. As long as this fellow resigns, thee is no deliverance for use cowherd-dames. Alas, what shall I do, what shall I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்