விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்*   உலப்புஇல் வலியார் அவர்பால்,*  வயிரம்-
    விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ*   அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*
    வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று*  மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
    அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வயிரம் - பகை
விளைந்திட்டது என்று எண்ணி - உண்டாகிவிட்ட தென்றறிந்து
உளைந்திட்டு - அஞ்சி நடுங்கி
விண்ணோர் - தேவர்கள்
பரவ - (திருவடிகளிலே தொழுது) துதிக்க,

விளக்க உரை

மதுகைடபர்களை மாளச்செய்த பெருமையையும் இரணியாசுரனுடலைப் பிளந்த வலிமையையும் பேசி இப்படிப்பட்ட பராக்ரமசாலி காண்மின் இன்று அசக்தரைப் போலே கூட்டுண்டு கிடக்கிறானென்கிறார்.

English Translation

When the gods found the boundless strength of Madhu-kaitabha a cause for fear and enemity, they sought the help of the Lord, who ended the Asuras; lives. He is also the one who came against the mighty bow-wielding, flerce Hiranya and tore his chest apart. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்