விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்* 
  ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*
  பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்* 
  மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாயுள் (பிள்ளையின்) வாயினுள்ளே;
வையகம் உலகங்களை;
கண்ட ஸாக்ஷாத்கரித்த;
நல் மடவார் வைல்க்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய;
மாதர் ஸ்த்ரீகளானவர்கள், (‘‘இவன்)

விளக்க உரை

உரை:1

கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

உரை:2

கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க, அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’ என்று கொண்டாடிக் கூறினார்கள்.

English Translation

When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed Lord himself, endowed with all the auspicious qualities”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்