விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்ளினை வாய்பிளந்து*  பூங்குருந்தம் சாய்த்து,* 
    துள்ளி விளையாடி*  தூங்குஉறி வெண்ணெயை,*
    அள்ளிய கையால்*  அடியேன் முலைநெருடும்*
    பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!*  பேய்முலை உண்டானே! சப்பாணி

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ குருந்தம் சாய்த்து - பூத்திருந்த குருந்த மரத்தைச் சாய்த்து முறித்து
துள்ளி விளையாடி - நிலத்தில் நில்லாமல் விளையாடல்களைச் செய்து
தூங்கு உறி வெண்ணெயை - தொங்குகின்ற உறியிலுள்ள வெண்ணெயை
அள்ளிய - வாரியெடுத்த
கையால் - கைகளாலே

விளக்க உரை

மகனை நோக்கித் தாய் சொல்லும் வார்த்தையில் ‘அடியேன் முலை நெருடும்’ என்றது கூடுமோவெனின், கீழ்ச்சொன்ன பரத்வ ஸௌலப்யங்களிலே தோற்றுத் தான் அடிமைப்பட்டமை தோற்றச் சொல்லுகிறாளென்க. அன்றி, ஆழ்வாருடைய ஸமாதியும் கூடவே கலசியிருக்கையாலே ஆழ்வார் தம் ஸ்வரூபத்துக்குச் சேர அடியேன் என்றது, என்னவுமாம். புள்ளின்வாய் பிறந்தது, பூங்குருந்தம் சாய்த்தது முதலிய சேஷ்டிதங்கள் சாப்பாணி கொட்டும் பருவத்திற்குப் பின்பு நடந்தவையாதலால் அவற்றையிட்டுத் துதித்து ‘சப்பாணிகொட்டாய்’ என்று ஸமாதாநம் செய்யப்பட்டதாகும், சப்பாணி கொட்டாய் என்று யசோதை பிராத்தித்த ஸமயத்தில் மேற்குறித்து சேஷ்டிதங்ள் நடவாதிந்தாலும், அவ்யசோதையின் நிலைமையை ஏறிட்டுக் கொண்டு பேசுகிற ஆழ்வார் பிற்காலத்த வராகையாலே அந்த சேஷ்டிதங்களை இவர் எடுத்தோதக் குறையில்லையிறே. பெரியாழ்வார் திருமொழிவியாக்கியாணத்தில் ஸ்ரீ மணவாளமாமுனிகள் இங்ஙனே ஸமாதான மருளிச்செய்துள்ளமை காண்க.

English Translation

O Child, my Master! You rip the horse;s jaws. you destroy the kurundu trees, then skip and play; reaching out to the hanging rope-self you gobble butter, then fiddle with my breasts with those hands, clap chappani! O Lord who sucked the ogress; breast, Clap Chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்