விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாயர் மனங்கள் தடிப்ப*  தயிர்நெய்உண்டு 
    ஏய்எம்பிராக்கள்*  இருநிலத்து எங்கள்தம்*
    ஆயர் அழக*  அடிகள்*  அரவிந்த-
    வாயவனே கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் பிராக்கள் - எம்பெருமானே!
இரு நிலத்து - விசாலமான இப்பூமண்டலத்திலே
எங்கள் தம் ஆயர் - எங்கள் இடைச்சாதிக்குள்ளே
அழக - அழகிற் சிறந்தவனே!
அரவிந்தம் - தாமரைப் பூப்போன்ற

விளக்க உரை

பெற்ற தாய், வளர்த்த தாய் என்று சொல்லப்படுகிற தாய்மாருடைய நெஞ்சு துடிக்கும்படியாக (அதாவது, அளவில்லாமல் வாஜீவிழுங்குகிறானே, இத்தனையும் இவனுக்கு ஜரிக்கமாட்டாதே, வயிற்றுக்கு வலியாகுமே! என்று நெஞ்சுளுக்கும்படியாக)த் தயிரையும் நெய்யையும் களவுகண்டு புஜித்து, இப்படி செய்தோமே! என்று வெட்கப்படாதே ‘பொருத்தமான காரியமே செய்தோம்’ என்றிருக்கிற பெருமானே! இந்நிலவுலகின்கண் எங்களிடைச் சாதியிலுள்ளாரில் மிக அழகையுடையவனே! திருவடிகளும் திருவதரமும் செவ்வியத் தாமரைபோலே யிருக்கப்பெற்றவனே! அதற்குப் பரபாகமாகக் கரிய திருமேனியுடையவனே! சப்பாணி கொட்டவேணும். இரண்டாமடியின் முதற்பாதம் ஏய் என்று பிரியும். ஏய்தல் - பொருந்துதல், நிறைதலுமாம். தயிரையும் நெய்யையுமுண்டு வயிறு நிறையப்பெற்ற என்னவுமாம். ‘அரவிந்தமாயவனே’ என்றும் பாடமுளதாக வியாக்கியானங் காண்கிறது, அப்போது, திருவடிகள் தாமரையாயிருக்கிறவனே! என்று பொருள்காண்க. மால்வண்ணனே! – ‘மால்’ என்று கருமைக்கும் வியாமோஹத்திற்கும் பெயர், வியாமோஹமே வடிவெடுத்திருப்பவனே! என்னவுமாம்.

English Translation

O Beautiful Lord of the Universe, king of the cowherd clan! You always eat up the curds and Ghee of the Maids, making their hearts flutter! O Lord of lotus feet, and lotus lips! Clap chappani! O Dar Lord! Clap chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்