விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா*  அம்கயல் கண்ணினார்கள் இருப்ப* 
    தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து*  தஞ்சமே சில தாபதர்என்று*
    புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த*  புன்மையாளன் நெஞ்சில் புக எய்த* 
    அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புக - உறைக்க
எய்த - அம்பு செலுத்தியவரும்
அனங்கள் அன்ன - மன்மதனைப் போன்ற அழகுடையவரும்
திண் தோள் - வலிமைமிக்க திருத்தோள்களையுடையவருமான
எம் இராமற்கு - எங்களிராமவிரானுக்கு

விளக்க உரை

தஞ்சமேசில தாபதர் என்று -சில தாபதர் தஞ்சமோ என்று நினைத்தானாம் இராவணன். அதாவது – ‘இந்த ஸீதையை நாம் அபஹரிக்கிறோமே, இவளைச் சேர்ந்தவர்கள் பரிந்து எதிரிட்டுவந்தால் நமக்கு அநர்த்தமாகுமோ?’ என்று ஆலோசிக்கப் புகுந்து, ‘மரவுரியம் சடையுமாய்த் தாபஸ வேஷங்கொண்டிருக்கின்ற ராமலக்ஷ்மணர்கள் இவளுக்குத் தஞ்சமாக வரக்கூடும், அவர்கள் நமக்கு ஒருசரக்கோ?’ என்று அவர்களை அபதார்த்தமாக நினைத்துவிட்டு அபஹரித்து வந்தானென்றபடி.

English Translation

Despite having his own heart-throb Mandodari and many other beautiful fish-eyed queens, -instead of enjoying their precious soft breasts, -our lowly king entered the forest and took the peacock-fair Dame Sita captive. The Lord Rama with arms as beautiful as Madana the-god-of-love, shot arrows into his chest. We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்