விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்*  தீமை செய்யாதே* 
  மருவும் தமனகமும் சீர்*  மாலை மணம் கமழ்கின்ற*
  புருவம் கருங்குழல் நெற்றி*  பொலிந்த முகிற்-கன்று போலே* 
  உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புருவம் - புருவங்களையும்;
கரு குழல் - கருநிறமான கூந்தலையும்;
பெற்றி - (இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு;
பொலிந்த - விளங்குகின்ற;
முகில் கன்றுபோலே - மேகக் கன்று போலே;

விளக்க உரை

நீ தெருவிலே நின்றுஅவ்விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப்பெண்களைத் தீம்பு செய்து திரியாமல் மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுதுபடாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள். எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப்பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்தமுகில் கன்று” என இல்பொருளுவமை கூறப்பட்டது. கமழ்கின்ற - ‘அன்’ சாரியை பெறாத முற்று.

English Translation

O Beautiful Lord, like a calf born to the dark clouds, with a bright forehead, curly locks and Shapely eyebrows! Do not stand in the streets and tease the young milkmaids. These are beautiful garlands with fragrant Maruvu and Davanam springs. Come here and wear them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்