- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
உண்டு உலகுஏழினையும்* ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
கண்துயில் கொண்டுஉகந்த* கருமாணிக்க மாமலையை,*
திண்திறல் மாகரிசேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
அண்டரதம் கோவினை இன்று* அணுகும் கொல்? என்ஆய்இழையே!
காணொளி
பதவுரை
உலகு எழினையும் - ஸப்தலோகங்களையும்
உண்டு - (பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி
ஒரு பாலகன் - ஒரு சிறுகுழவியாய்
ஆல் இலை மேல் - ஓராலிலையின்மீது
கண் துயில் கொண்டு - திருக்கண்வளர்ந்தருளி
விளக்க உரை
கருமாணிக்க மாமலையை - மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க. “அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை - ஆய்தல் - ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.
English Translation
The Lord who swallowed the seven worlds and slept as a child on a fig leaf is the Lord of the celestials. He is a dark mountain gem, residing in Tirumalirumsolai amid strong wild elephants. Will my tastefully jewelled daughter reach him today? I wonder!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்