விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
    தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*
    கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
    கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அமர் - வண்டுகள் படிந்த
சாரல் - பக்கங்களையுடைய
மாலிருஞ் சோலை - திருமாலிருஞ்சோலையிலுள்ள
மா மணி வண்ணரை - நீலமணிவண்ணரான அழகரை
வணங்கும் தொண்டவர் - வணங்குகின்ற பாகவதர்களை

விளக்க உரை

எங்கும் தேன் நசையாலே வண்டுகள் படிந்த சாரலையுடைத்தான திருமாலிருஞ்சோலை மாலையிலே விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அழகரை அவ்வடிவழகில் ஈடுபட்டு ஆச்ரயிக்குமவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைத் துதிப்பதாகிற பாகவத நிஷ்டையிலே ஊன்றினவரான திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய இத்திருமொழியைக் கொண்டு ப்ரீதிக்குப் போக்குவிட்டுப் பாடும்படியான பாக்கியமுடையவர்கள் கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகராயிருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

This is a garland of songs by sharp-spear-wielding kaliyan, king of screwpine-fenced-fertile-fields-Mangai tract, offering praise to devotees who worship the gem-hued Lord of bee-humming fragrant groves, Malirumsolai. Those who learn to sing it will rule this ocean-girdled earth

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்