விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேனுகன் ஆவி போய்உக*  அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,* 
    தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
    வானகச் சோலை மரகதச் சாயல்*  மாமணிக் கல்அதர் நுழைந்து,* 
    மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மரதகம் சாயல் - மரதகமணிபோன்ற ஒளியையுடையவையாய்
வானகம் -  ஆகாசத்தளவும் ஓங்கினவைகளான
சோலை - சோலைகளிலிருக்கிற
மா மணிக்கல் அதர் - நீலப்பாறை வழிகளில் (புகுந்து)
நிறைந்து - நிறைய இருந்து

விளக்க உரை

மரதகப் பச்சையின் நிறங்கொண்டு ஆகாசப் பரப்புடைய ஓங்கி யிருந்துள்ள சேலையினுள்ளில் நீலப்பாளை வழியே போய்ப்புக்கு மான்கள் தேனைப்பருகா நின்றுள்ளதாம் இத்திருமலை. அதர் - வழி.

English Translation

O Frail Heart! The ocean-hued Lord came then as krishna, threw the Asura Dhenuka against a Palm tree, killin him instantly, Long ago he decided to reside in Malirumsolai, where deer frolic in the blue-gem mountain paths amid emerald-green forests. Come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்