விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நார்ஆர்இண்டை*  நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,* 
    ஆரா அன்போடு*  எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*
    தாரா ஆரும்*  வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
    கூர்வாய் நாரை*  பேடையொடு ஆடும் குறுங்குடியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூர் வாய் நாரை - கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள்
பேடையோடு - பேடைகளுடனே
ஆடும் - களித்துவர்த்திக்கப்பெற்ற
குறுங்குடி - திருக்குறுங்குடியென்கிற
எம்பெருமான் ஊர் - திவ்யதேசத்தை

விளக்க உரை

என்னைப்போலே பதியெபரவித்தொழுந் தொண்டர்களே! நல்ல புஷ்பங்களையும் தொடுத்த மாலைகளையும் கையிற்கொண்டு பரிபூர்ணபக்தியுடனே திருக்குறுங்குடியைச் சென்று சேருங்கள், அத்தலத்தில் அஃறிணைப் பொருள்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழுமாதலால் நீங்களும் அங்குச் சென்று வேண்டினபடி கிஞ்சித்கரிக்கப் பெற்றுக் களித்து வாழலாமென்றாராயிற்று. தாரா - நீர்வாழ்பறவை.

English Translation

Devotees! With fresh flower garlands, and hearts filled with love, come to offer worship to the Lord in kurungudi where sharp-beaked water-egrets rejoice with their mates in fields filled with Tara water birds

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்