விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்லிச்சிறு நுண்இடையாரிடை*  நீர்வைக்கின்ற,*
    அல்லல் சிந்தை தவிர*  அடைமின் அடியீர்காள்!,*
    சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,* 
    கொல்லை முல்லை*  மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எயிறு ஒப்பான் - பற்களோடொப்ப
மெல் அரும்பு - அழகிய அரும்புகளை
ஈனும் - புறப்படவிடுமிடமான
குறுங்குடி -  திருக்குறுங்குடியை
அடைமின் - அடையுங்கோள்

விளக்க உரை

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருக்கக் கூடிய ஸ்வரூபம் வாய்ந்த பாகவதர்களே!, விஷயாந்தரத்தில் துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்துத் திருக்குறுங்குடியை அடையப் பாருங்கள், பெண்களின் பற்களைப்போல முல்லையரும்புகள் உண்டாகப் பெற்ற தலம் இது. விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்தைப் பற்றும்படி உபதேசிக்கிற ஆழ்வார்களை வருணித்துப் பேசுவது எதுக்காக? என்று கேட்ககூடும், இதற்கு நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வதாவது -உலகத்தில் வாக்குப்படைத்தவர்கள் பலவகைப்படுவர், சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவர்கள், சிலர் சிறந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைபடிப் பேசுவர்கள், சிலர் நாவீறுடைமையினால் அற்பவிஷயங்களையும் கனக்கப்பேசுவர்கள், இப்படி பேச்சில் பலவகைகளுண்டு, பேசுகிறவர்களின் வாக்கின் பொக்கை அநுசரித்து விஷயங்கள் சிறுத்துப் பொவதம் பெருத்துப் பொவதுமுண்டு, திருமங்கையாழ்வாருடைய நாவீறு லோகவிலக்ஷணமாகையால் அற்பவிஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் பெருகாறுருடைய சொற்போக்கு. “வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார்வனமுலை“ என்றாப்போலே பெருத்திருக்கும், ஆகவே விஷயங்கள் அற்பமென்பதில் தடையில்லை, இவருடைய வாக்குத்தான் பரமகம்பீரமாகையால் அற்பவிஷயத்தையும் கனக்கப் பேசுகின்றது, என்றாம். கீழ் ஆறாம்பத்தில் “துறப்பேனல்லேன்“ என்னுந்திருமொழியில் “நான்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப பெள்ளத்தாழ்ந்தேன்“ என்ற நான்காம்பாட்டின் வியாக்கியானத்தில் இக்கரத்துப்படப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளவை காண்க. வல்லி -வடசொல். அல்லல்சிந்தை -விஷயபோகங்கள் தற்காலத்தில் இன்பம் நுகர்வதுபோலிருந்தாலும் முடிவி்ல் துன்பமாகவே தலைக்கட்டுதல் பற்றி “அல்லல்சிந்தை“ எனப்பட்டது.

English Translation

Devotees! Give up you fixation with dames of creeper-thin waists. If you wish to see rows of beautiful feeth that match the berry lips of lotus-dame Lakshmi, come to kurungudi where the backyards; Mullai creeper sprouts fender white buds

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்