விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கவ்வைக் களிற்று மன்னர் மாள*  கலிமாத்தேர்-
    ஐவர்க்குஆய்,*  அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
    மைவைத்து இலங்கு*  கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,* 
    கொவ்வைக் கனிவாய்க்*  கிள்ளை பேசும் குறுங்குடியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாள - மாண்டுபோம்படியாக
ஐவர்க்கு ஆய் - பஞ்சபாண்டவர்களுக்காக
கலி மா தேர் - திண்ணிய பெரியதேரை
உய்த்தான் - நடத்தின பெருமானுடைய
ஊர்போலும் - திவ்யதேசமாகும்

விளக்க உரை

பாரதப்போரில் பாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து எதிரரசர்கள் தொலையும்படியாகப் பார்த்தஸாரதியாய்த் தேரைநடத்தின பெருமான் அப்படிப்பட்ட ஆச்ரிதபக்ஷபாதம் இன்னமும் விளங்கத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருக்குறுங்குடி. இத்தலம், கிளிகள் பெண்களைப்போலே அழகாகப் பேசும்படியான நிலைமை வாய்ந்தது. களிறு+மன்னர், களிற்று மன்னர் கவ்வை என்று இரைச்சலுக்குப் பெயர், பெரிய கோஷம் செய்யவல்ல யானைகளென்றபடி. கொவ்வைக் கனினாய்க்கிள்ளை -கிளிகளுக்குக் கோவைப்பழம் இனிய உணவாதலால் கொவ்வைக் கனியை வாயிலையுடைய கிளி என்று முரைக்கலா மென்ப.

English Translation

The red berry-beaked parrots speak like the collyrium-lined bright-eyed dames in kurungudi. It is the abode of the Lord who drove the chariot for the five in the war that killed many elephant-seated mighty kings

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்