விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிரம்முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 
    உரமும் கரமும் துணித்த*  உரவோன்ஊர் போலும்,*
    இரவும் பகலும்*  ஈன்தேன் முரல,*  மன்றுஎல்லாம்-
    குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்று எல்லாம் - வெளிநிலமுழுதும்
குரவின் பூவேதான் - குருவம்பூக்களே
மணம் நாறும் - பரிமளிக்கப்பெற்றதுமான
குறுங்குடி - திருக்குறுங்குடியானது
முன் - முன்பு (ராமாவதாரத்தில்)

விளக்க உரை

சிரஸ், உரஸ் என்ற வடசொற்கள் மறையே சிரம், உரம் எனத் திரிந்தன. கரம் -தற்சம வடசொல். உரவோன் -உரமுடையவன், உரமாவது வலிமை. மன்று நாற்சந்தி.

English Translation

Night and day the bees hum sweetly while the fragrance of the Kuravu trees spreads everywhere in kurungudi. It is the abode of the strong Lord who went to Lanka and cut the arms and chest of the ten-headed demon king

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்