விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துங்கஆர் அரவத் திரைவந்து உலவ*  தொடுகடலுள்,-
    பொங்குஆர் அரவில் துயிலும்*  புனிதர்ஊர் போலும்,*
    செங்கால் அன்னம்*  திகழ்தண் பணையில் பெடையோடும்,*
    கொங்குஆர் கமலத்து*  அலரில் சேரும் குறுங்குடியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கால் - சிவந்தகால்களையுடைய
அன்னம் - அன்னப்பறவை
திகழ் தண் பணையில் - அழகிய குளிர்ந்த நீர் நிலைகளிலே
கொங்கு ஆர் கமலத்து அலரில் - மணம்மிக்க தாமரைப்பூவில்
பெடையோடும் - பேடையுடனே

விளக்க உரை

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளுமழகு எளியர்க்குக் கிட்ட வொண்ணாதிருக்குமென்பது மாத்திரமேயல்லாமல் பிரமன் முதலியோர்க்குங்கூட இக்கரையிலே நின்று கூப்பிட வேண்டும்படியிருக்குமாதலால் அவ்வருமையைப் போக்கி எல்லார்க்குமெளியனாக எழுந்தருளியிருக்குமிடம் திருக்குறுங்குடி யென்கிறார். துங்கார் -துங்கம் என்பது வடசொல், உந்நதம் என்றபடி, ‘துங்கார்’ என்றது விகாரப் புணர்ச்சி. பொங்கு+பொங்கார், பொங்கு-முதனிலைத் தொழிற்பெயர், பொங்குதல் நிறைந்த அரவம் என்றபடி, எம்பெருமான் இடைவிடாது தன்மேல் சாய்ந்தருளப் பெறுவதனுலுண்டாகிய மகிழ்ச்சி மிக்கவன் என்றபடி.

English Translation

The waves of the roaring ocean come touching the feet of the pure Lord who reclines in its midst, on a serpent bed. His abode is kurungudi where swans with red feet nestle with their mates in beds of fragrant lotus blossoms amid cool lakes

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்