விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண்திமில் ஏற்றின் மணியும்*  ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
    கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற*  கோல இளம்பிறையோடு கூடி,*
    பண்டைய அல்ல இவை நமக்கு*  பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,* 
    கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திண் திமில் - திடமான முசுப்புடைய
ஏற்றின் - விருஷபத்தினுடைய
மணியும் - கழுத்துமணியும்
ஆயன் - இடையனுடைய
தீம் குழல் ஓசையும் - மதுரமான புல்லாங்குழ லொழியும்

விளக்க உரை

மாட்டின் மணியோசை, தென்றல்காற்று, மாலைப்பொழுது, இளம்பிறை ஆகிய இவை பலகாலும் நம்மை வருத்தியிருந்தாலும் இப்போது வருத்துகிறபடி இதற்கு முன்பு ஒருநாளுமில்லை; இவை ஒவ்வொன்றும் தனித்தனியே கொலைசெய்யப் போதுமானவை; கூட்டமாகக் கூடி வந்து நலிகிற இந்நாள் அந்தோ! பாதை பொறுக்கப் போகின்றதில்லை; ஸாதாரண விஷயங்களை ஆசைப்படாதே * உயர்வற வுயர்நலமுடையவனாய் அயர்வறுமரர்களதிபதியானவனை ஆசைப்படும்படியான பாவத்தைப் பண்ணின என்னுடைய ஆவி இனித் தரிக்கவிரகில்லை; நான் வாழவேண்டில் திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்ந்திடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிநிறவண்ணரைக் கண்டவாறே என்வாட்டமெல்லாம் தீரும்; மேகத்தையும் மணியை யுங்கண்ட பின்பும் வாட்டம் நிற்குமோ? ஆகையாலே பாதகவஸ்துக்களின்கையிலே அகப்பட்டு நான் நலிவுபடாதே இவையெல்லாம் எனக்கு அநுகூலங்களாகப் பெறும் தேச விஷேயத்திலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்றாளாயிற்று. ;இமில்; எனினும் ;திமில்; எனினும் மாட்டின் முசுப்பு. ஆயன் தீங்குழலோசை = ஸாதாரணமான இடையார் ஊதும் புல்லாங்குழலோசையும் கோபாலக்ருஷ்ணனுடைய குழலோசையை நினைப்பூட்டி வருத்துமென்க. தீம்-இனிமை. கொண்டதோர் மாலை = ;இன்று இவளை முடித்தே விடுவது, என்னுங்கோட்பாடுடைய மாலைப்பொழுது,

English Translation

The sound of the strong humped bull;s bell, the sweet sounds of the cowherd;s flute, the evening, the breeze, the tender crescent Moon of twilight, -no more the ones of the past, -all have joined hands to kill my soul softly, alas! Carry me now to kurungudi, the abode of the Lord of gem hue and cloud hue

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்