விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரவி நெஞ்சே! தொழுதும்எழு*  போய் அவன் பாலம்ஆய்,*
    இரவும் நாளும் இனிகண் துயிலாது*  இருந்து என்பயன்?*
    விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,*  வெண்திரை*
    புரவி என்னப் புதம்செய்து*  வந்துஉந்து புல்லாணியே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடு வெண்மணல் - அதிகமான வெண்மணற்களை
மேல் கொண்டு - மேலே எறட்டிக்கொண்டு வந்து
வெண் திரை - வெளுத்த அலைகள்
புரவி என்ன - குதிரை போல
புதம் செய்துவந்து - தாவிக்கொண்டு வந்து தள்ளுமிடமான

விளக்க உரை

போயவன் பாலமாய் = ;போய்; என்று தனியே பிரிக்கவுமாம், ;போயவன் என்று முழுச்சொல்லாக் கொள்ளவுமாம். முதல் யோஜனையில் ;போய்த்தொழுதும்; என்று அந்வியப்பது; இரண்டாம் யோஜனையில், போயவன் - போனவன் என்றபடி; பிரிந்துபோன வன் திறத்திலேயே நெஞ்சை வைத்தவர்களாய்க் கொண்டு இரவும் பகலும் இங்கே கண்ணுறங்காதிருத்தலால் என்ன பயன்? என்கை. மேன்மேலும் அலையெறிந்து வருவதைக் குதிரை தாவிவருவதோ டொக்கச் சொல்லுதல் கவிமரபு; புதஞ்செய்தல்-தாவிப்பாய்தல். புரவி-குதிரை.

English Translation

O Heart! what use now, night and day losing sleep over the deserter? He resides in Pullani by the sea where white waves come rushing like gallopping horses, laying white precious stones and pearls at his feet, praise him! Bow that-a-ways and arise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்