விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆலத்து இலையான்*  அரவின் அணை மேலான்* 
  நீலக் கடலுள்*  நெடுங்காலம் கண்வளர்ந்தான்*
  பாலப் பிராயத்தே*  பார்த்தற்கு அருள்செய்த*  
  கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா! 
  குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆலத்து இலையான் - ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான் - (எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்பவனும்
நிலம் கடலுள் - கருநிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம் - வெகுகாலமாக
கண் வளர்ந்தான் - யோக நித்ரை செய்பவனும்

விளக்க உரை

ஆல்+இலையான்=(அத்துசாரியைப் பெற்று) ஆலத்திலையான். கஷீராப்தி எம்பெருமான் திருமேனியின் நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுமாதலால் ‘நீலக்கடல்’ எனப்பட்டது; “**************” என்று போஜராஜன் சொல்லியுள்ளது காண்க. அன்றி, “உவர்க்குங்கருங்கடல் நீருள்ளான்” என்றபடி லவணஸமுத்ரத்தில் பள்ளிகொண்டிருப்பதாகக் கூறுவதும் உண்டாதலால் அதுவுங்கொள்ளத்தக்கதே

English Translation

The Lord appeared as a child on a fig leaf; he reclines on a serpent and sleeps for long in the deep ocean. He appears as the Archa reclining in Kudandai. Even in his childhood he graced Arjuna. He is the beautiful child here. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்